பாடம் : 17
நபிமொழியை நிறுத்தி நிதானமாக அறிவிப்பதும் நபிமொழியை எழுதி வைத்துக் கொள்வது தொடர்பான விதியும்.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்கு அருகில் அமர்ந்து கொண்டு) நபிமொழிகளை அறிவிக்கலானார்கள். அப்போது “அறையின் உரிமையாளரே! நான் சொல்வதைக் கேளுங்கள்! அறையின் உரிமையாளரே! நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று கூறினார்கள்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். தொழுது முடித்ததும் அவர்கள் என்னிடம், “சற்று முன்னர் இவர் அறிவித்த (விதத்)தையும் இவர் கூறியதையும் நீ கேட்க வில்லையா? நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக்கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணிவிடுவார். (அந்த அளவுக்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசிவந்தார்கள்)” என்று கூறினார்கள்.
Book : 53
(முஸ்லிம்: 5733)16 – بَابُ التَّثَبُّتِ فِي الْحَدِيثِ وَحُكْمِ كِتَابَةِ الْعِلْمِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا بِهِ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ
كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُ، وَيَقُولُ: اسْمَعِي يَا رَبَّةَ الْحُجْرَةِ اسْمَعِي يَا رَبَّةَ الْحُجْرَةِ وَعَائِشَةُ تُصَلِّي، فَلَمَّا قَضَتْ صَلَاتَهَا، قَالَتْ لِعُرْوَةَ: أَلَا تَسْمَعُ إِلَى هَذَا وَمَقَالَتِهِ آنِفًا؟ إِنَّمَا «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ حَدِيثًا، لَوْ عَدَّهُ الْعَادُّ لَأَحْصَاهُ»
Tamil-5733
Shamila-2493
JawamiulKalim-5329
சமீப விமர்சனங்கள்