பாடம் : 10
குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழலாம்.
அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் -தம் புதல்வி ஸைனபுக்கும் அபுல்ஆஸ் பின் அர்ரபீஉ அவர்களுக்கும் பிறந்த- (தம் பேத்தி) உமாமாவை (தமது தோளில்) சுமந்துகொண்டு தொழுவார்கள். அவர்கள் (நிலையில்) நிற்கும்போது உமாமாவைச் சுமப்பார்கள்; சஜ்தாவுக்குச் செல்லும்போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் மாலிக் (ரஹ்) அவர்களிடம், “இந்த ஹதீஸை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அம்ர் பின் சுலைம் அஸ்ஸுரைக் (ரஹ்) அவர்களும், அம்ர் அவர்களிடமிருந்து ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள்.
Book : 5
(முஸ்லிம்: 943)9 – بَابُ جَوَازِ حَمْلَ الصِّبْيَانِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قُلْتُ لِمَالِكٍ: حَدَّثَكَ عَامِرُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ
«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِأَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ، فَإِذَا قَامَ حَمَلَهَا وَإِذَا سَجَدَ وَضَعَهَا؟» قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ: نَعَمْ
Tamil-943
Shamila-543
JawamiulKalim-849
சமீப விமர்சனங்கள்