பாடம் : 14
தொழும்போதோ மற்ற நேரங்களிலோ பள்ளிவாசலுக்குள் எச்சில் துப்பலாகாது.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் (உமிழப்பட்டிருந்த) எச்சிலைக் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி(சுத்தப்படுத்தி)ய
பின் மக்களை நோக்கி, “உங்களில் ஒருவர் தொழும்போது தமது முகத்துக்கெதிரே (கிப்லாத் திசையில்) எச்சில் துப்பவேண்டாம். ஏனெனில், அவர் தொழும்போது அல்லாஹ் அவருடைய முகத்துக்கெதிரே இருக்கிறான்” என்று கூறினார்கள்.
Book : 5
(முஸ்லிம்: 952)13 – بَابُ النَّهْيِ عَنِ الْبُصَاقِ فِي الْمَسْجِدِ فِي الصَّلَاةِ وَغَيْرِهَا
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ فَحَكَّهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللهَ قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى»
Tamil-952
Shamila-547
JawamiulKalim-857
சமீப விமர்சனங்கள்