தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-10284

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களிடம் நான் உறவு பாராட்டுகின்றேன். அவர்களோ என்னிடம் பகைமை பாராட்டுகின்றனர். நான் உதவி செய்கின்றேன். அவர்கள் எனக்கு ஊறு விளைவிக்கின்றார்கள். அவர்களிடம் நான் பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் என்னிடம் அறிவீனத்தையே கடைப்பிடிக்கின்றார்கள்” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ சொல்வது போன்ற நிலையில் இருந்தால் நீ அவர்களை சூடான சாம்பலைத் திண்ணச் செய்தவன் போலாவாய். (அதாவது அவர்கள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்) இதே நிலையை நீ தொடர்கின்ற வரை அவர்களின் தீமையை விட்டு காப்பதற்காக ஓர் உதவியாளர் (வானவர்) உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 10284)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ زُهَيْرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي، وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ، وَيَجْهَلُونَ عَلَيَّ، وَأَحْلُمُ عَنْهُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَئِنْ كَانَ كَمَا تَقُولُ لَكَأَنَّمَا تُسِفُّهُمْ الْمَلَّ، وَلَا يَزَالُ مَعَكَ ظَهِيرٌ مَادُمْتَ عَلَى ذَلِكَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-10284.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10076.




மேலும் பார்க்க: முஸ்லிம்-5000 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.