கர்தம் பின் ஸுஃப்யான் (ரலி) கூறியதாவது:
நான், நபி (ஸல்) அவர்களிடம், “நான் அறியாமைக்காலத்தில் செய்த நேர்ச்சை பற்றி மார்க்கத்தீர்ப்பு கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த நேர்ச்சை சிலை, அல்லது பலிபீடத்திற்கா? என்று கேட்டார்கள். அதற்கு நான் “இல்லை. அல்லாஹ்விற்காக செய்த நேர்ச்சை” என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ அல்லாஹ்விற்காக செய்த உன்னுடைய நேர்ச்சைப்படி புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிட்டு நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 15456)حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنِي أَبُو الْحُوَيْرِثِ حَفْصٌ مِنْ وَلَدِ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى بْنِ كَعْبٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ كَرْدَمٍ، عَنْ أَبِيهَا كَرْدَمِ بْنِ سُفْيَانَ،
أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَذْرٍ نُذِرَهُ فِي الْجَاهِلِيَّةِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلِوَثَنٍ أَوْ لِنُصُبٍ؟» قَالَ: لَا، وَلَكِنْ لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى، قَالَ: «فَأَوْفِ لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى مَا جَعَلْتَ لَهُ، انْحَرْ عَلَى بُوَانَةَ، وَأَوْفِ بِنَذْرِكَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-15456.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-15153.
إسناد ضعيف فيه حفص البصري وهو مجهول
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபுல்ஹுவைரிஸ் ஹஃப்ஸ் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : அபூதாவூத்-3313 .
சமீப விமர்சனங்கள்