ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உள்ளம் மாறிக்கொண்டே இருப்பதால் தான் அதற்கு (மாறக்கூடியது என்ற பொருள் கொண்ட) கல்ப் என்று பெயரிடப்பட்டது.
இந்த உள்ளம் மரத்தின் அடியில் தொங்கவிடப்பட்டிருக்கும் (பறவையின்) இறகைப் போன்றதாகும். காற்று அதை தலைகீழாக புரட்டிப்போடுகிறது.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 19661)قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّمَا سُمِّيَ الْقَلْبُ مِنْ تَقَلُّبِهِ، إِنَّمَا مَثَلُ الْقَلْبِ كَمَثَلِ رِيشَةٍ مُعَلَّقَةٍ فِي أَصْلِ شَجَرَةٍ تُقَلِّبُهَا الرِّيحُ ظَهْرًا لِبَطْنٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19661.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19220.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8974-அபூகப்ஷா-பராஉ பின் கைஸ் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.மட்டுமே இவரை பலமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார். இவரைப் பற்றி தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் அறியப்படாதவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் மக்பூல் என்ற தரத்திலும் சேர்த்துள்ளார்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-88 .
சமீப விமர்சனங்கள்