ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இந்த உள்ளம் வெட்டவெளியில் கிடக்கும் (பறவையின்) இறகைப் போன்றதாகும். காற்று அதை தலைகீழாக புரட்டிப்போடுகிறது.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 19757)حَدَّثَنَا يَزِيدُ قَالَ: أَخْبَرَنَا الْجُرَيْرِيُّ، عَنْ غُنَيْمِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ هَذَا الْقَلْبَ كَرِيشَةٍ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ يُقِيمُهَا الرِّيحُ ظَهْرًا لِبَطْنٍ»
قَالَ أَبِي: وَلَمْ يَرْفَعْهُ إِسْمَاعِيلُ، عَنِ الْجُرَيْرِيِّ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18922.
Musnad-Ahmad-Shamila-19757.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19315.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17167-ஸயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ அவர்கள் பலமானவர் என்றாலும் கடைசி காலத்தில் மூளை குழம்பியவர் ஆவார். அவர் மூளை குழம்பிய பின் தான் அவரிடமிருந்து யஸீத் பின் ஹாரூன் கேட்டுள்ளார் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.போன்றோர் கூறியுள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: அல்காமில் 4/444) - இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவிப்பவர்களை விட நபித்தோழரின் கூற்றாக அறிவிப்பவர்களே பலமானவர்களாகவும், அதிகமாகவும் உள்ளனர் என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க: இப்னு மாஜா-88 .
சமீப விமர்சனங்கள்