ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். உங்களில் உயிருள்ளவர்களும் அதை அணியட்டும். மரணம் அடைந்தவர்களையும் அதில் கஃனிடுங்கள். அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்.
அறிவிப்பவர் : ஸமுரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 20140)حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«عَلَيْكُمْ بِهَذِهِ الْبَيَاضِ، فَلْيَلْبَسْهَا أَحْيَاؤُكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20140.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19690.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24545-அபூகிலாபா-அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அம்ர் பலமானவர் என்றாலும் சில அறிவிப்பாளர்தொடரில் அபூகிலாபா விற்கும், ஸமுரா (ரலி) க்கும் இடையில் அபுல்முஹல்லப் கூறப்படுகிறார் என்பதால் இவர் ஸமுரா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று முக்பில் பின் வாதீ, ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் கூறுகின்றனர். என்றாலும் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவர் ஸமுரா (ரலி) அவர்களிடமும் கேட்டுள்ளார். அபுல்முஹல்லப் வழியாக ஸமுரா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார் என மிஸ்ஸீ இமாம் பதிவு செய்துள்ளார்.
(நூல்: தஹ்தீபுல் கமால்-3283)
- மிஸ்ஸீ இமாமின் இந்த கூற்று தவறாகும். இவருக்கு 400 வருடங்களுக்கு முன் வந்த இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள், இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் இவர் ஸமுரா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று கூறியதாக பதிவு செய்துள்ளார்.
(நூல்: அல்மராஸீலு லிஇப்னி அபீஹாதிம்-390)
- மேலும் அலாயீ அவர்களும் இவ்வாறே இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்.
(நூல்: ஜாமிஉத் தஹ்ஸீல்-362)
மேலும் பார்க்க: திர்மிதீ-2810 .
சமீப விமர்சனங்கள்