ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அனஸா குலத்தைச் சார்ந்த ஒருவர் கூறுகிறார் :
…நான் அபூதர் (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் உங்களிடம் கைகொடுப்பார்களா? என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் என்னிடம் கைகொடுக்காமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்…
(முஸ்னது அஹ்மத்: 21444)حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنِي أَبُو الْحُسَيْنِ، عَنْ أَيُّوبَ بْنِ بُشَيْرِ بْنِ كَعْبٍ الْعَدَوِيِّ، عَنْ رَجُلٍ، مِنْ عَنَزَةَ،
أَنَّهُ قَالَ لِأَبِي ذَرٍّ حِينَ سُيِّرَ مِنَ الشَّامِ، فَذَكَرَ الْحَدِيثَ، وَقَالَ فِيهِ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَافِحُكُمْ إِذَا لَقِيتُمُوهُ؟ فَقَالَ: مَا لَقِيتُهُ قَطُّ إِلَّا صَافَحَنِي
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21444.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20918.
- அபூதர் (ரலி)யிடம் கேட்டு அறிவிக்கும் அறிவிப்பாளரின் பெயர் குறிப்பிடாமல் அனஸா குலத்தைச் சார்ந்த ஒரு மனிதர் அறிவித்தார் என்று அய்யூப் பின் புஷைர் என்பார் அறிவிக்கிறார். அந்த மனிதரின் பெயர் என்ன? அவர் நல்லவரா? கெட்டவரா? நினைவாற்றல் உள்ளவரா? இல்லாதவரா? என்பது போன்ற எந்த விபரமும் கூறப்படாததால் இது பலவீனமான செய்தியாகும்.
- இத்துடன் இந்த அறிவிப்பில் வரும் அய்யூப் பின் புஷைர் பற்றியும் எந்த தகவலும் இல்லை. இவர் அறியப்படாதவர் என்பதால் மேலும் பலவீனமடைகிறது.
மேலும் பார்க்க: அபூதாவூத்-5214 .
சமீப விமர்சனங்கள்