பிலாலே! அதிகாலை, அடிவானில் நீளவாக்கில் (செங்குத்தாய்) வெண்மை தெரியும் நேரம் நீ ஸஹர் பாங்கு கூறுவீராக! அது (ஸுப்ஹு தொழுகை நேரம் அல்ல). அகலவாக்கில் வெண்மை பரவும் நேரம்தான் ஸுப்ஹு தொழுகை நேரமாகும் என்று பிலால் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு ஸஹர் உணவை வரவழைத்து ஸஹர் செய்தார்கள்.
மேலும், ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்தி, நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளனர் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 21507)حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ سَالِمِ بْنِ غَيْلَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي عُثْمَانَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ الْحِمْصِيِّ، عَنْ أَبِي ذَرٍّ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ: «أَنْتَ يَا بِلَالُ تُؤَذِّنُ إِذَا كَانَ الصُّبْحُ سَاطِعًا فِي السَّمَاءِ، فَلَيْسَ ذَلِكَ بِالصُّبْحِ، إِنَّمَا الصُّبْحُ هَكَذَا مُعْتَرِضًا» ثُمَّ دَعَا بِسَحُورِهِ فَتَسَحَّرَ، وَكَانَ يَقُولُ: «لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ مَا أَخَّرُوا السَّحُورَ، وَعَجَّلُوا الْفِطْرَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21507.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20977.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ , ஸுலைமான் பின் அபூ உஸ்மான் போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-21312 .
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஸஹர் பாங்கு நபியின் காலத்தில் ரமளான் மாதத்தில் மட்டும் சொல்லப்பட்டதா? அல்லது எல்லா நாளும் சொல்லப்பட்டதா?
விளக்கம் தேவை சகோதரரே….
வ அலைக்கும் ஸலாம்.
பார்க்க: புகாரி-621 .
ஹதீஸ்களில் இரு பாங்கு ரமளானில் மட்டுமே கூறப்பட்டது என்று வரவில்லை என்பதால் எல்லா நாட்களிலும் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஜசாகல்லாஹ்…சகோதரரே