அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ நான் உங்களிடம் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மேலும் அது தான் வானத்திலிருந்து பூமிவரை நீட்டப்பட்ட கயிரைப் போன்று இறைத்தொடர்புள்ளதாகும்..
மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 21578)حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الرُّكَيْنِ، عَنِ الْقَاسِمِ بْنِ حَسَّانَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنِّي تَارِكٌ فِيكُمْ خَلِيفَتَيْنِ: كِتَابُ اللَّهِ، حَبْلٌ مَمْدُودٌ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، أَوْ مَا بَيْنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ، وَعِتْرَتِي أَهْلُ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21578.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21043.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் காஸிம் பின் ஹஸ்ஸான் பற்றி புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் இவரின் ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை என கூறியுள்ளார். - மேலும் இதில் வரும் ஷரீக் பின் அப்துல்லாஹ் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க : முஸ்லிம்-4782 .
சமீப விமர்சனங்கள்