தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21897

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தனது தோழர்களுடன்) ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றபோது “தாத் அன்வாத்‘ என்று சொல்லப்பட்ட, இணை வைப்பவர்களுக்கென்று இருந்த ஒரு இலந்தை மரத்தை கடந்து சென்றார்கள். அவர்கள் (பரக்கத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளை அதில் தொங்கவிட்டு கொள்வர்.

அதைக் கண்ட நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத் அன்வாத்‘ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்‘ என்று கேட்டார்கள்.(அல்குர்ஆன் 7:138) இதைப் போலவே, நீங்களும் கேட்கிறீர்கள்.) என்று கூறிவிட்டு,

“என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னுள்ளவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாக்கித் அல்லைஸி (ரலி)

(முஸ்னது அஹமது: 21897)

حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا لَيْثٌ يَعْنِي ابْنَ سَعْدٍ، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سِنَانِ بْنِ أَبِي سِنَانٍ الدُّؤَلِيِّ ثُمَّ الْجُنْدَعِيِّ، عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ:

أَنَّهُمْ خَرَجُوا عَنْ مَكَّةَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى حُنَيْنٍ، قَالَ: وَكَانَ لِلْكُفَّارِ سِدْرَةٌ يَعْكُفُونَ عِنْدَهَا، وَيُعَلِّقُونَ بِهَا أَسْلِحَتَهُمْ، يُقَالُ لَهَا: ذَاتُ أَنْوَاطٍ، قَالَ: فَمَرَرْنَا بِسِدْرَةٍ خَضْرَاءَ عَظِيمَةٍ، قَالَ: فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قُلْتُمْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ كَمَا قَالَ قَوْمُ مُوسَى: {اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةً قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ} [الأعراف: 138] إِنَّهَا السُّنَنُ، لَتَرْكَبُنَّ سُنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ سُنَّةً سُنَّةً


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-20892.
Musnad-Ahmad-Shamila-21897.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21341.




மேலும் பார்க்க: திர்மிதீ-2180 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.