தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22267

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த மனிதராக இருந்தாலும் அவர் தொழ நாடியவராக உளூச் செய்கையில் கைகளை கழுவும் போது, அவரின் (கைகளால் செய்த) பாவங்கள் வழிந்தோடும் முதல் தண்ணீருடன் சென்றுவிடுகிறது. அவர் வாய் கொப்பளித்து  நாசிக்கு நீர் செலுத்தி தூய்மை செய்யும் போது அவரின் நாவிலிருந்தும், இரு உதடுகளிலிருந்தும் அவரின் பாவங்கள், வழிந்தோடும் முதல் தண்ணீருடன் சென்றுவிடுகிறது.

அவர் முகத்தைக் கழுவும் போது அவரின் காது, கண்களிலிருந்தும் அவரின் பாவங்கள், வழிந்தோடும் முதல் தண்ணீருடன் சென்றுவிடுகிறது. இரு கைகளை முழங்கை வரையும், இருகால்களை கரண்டை வரையும் கழுவும் போது அவரின் தாய் அவரைப் பெற்றெடுத்த நாளின் பாலகனைப் போன்று அவரின் அனைத்து பாவங்களை விட்டு அவர் நிம்மதி பெறுகிறார். உளூச் செய்த பின் அவர் தொழ நின்றால் அவரின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான். அவர் அமர்ந்தால் (பாவம் நீங்கி)  நிம்மதி பெறுகிறார்.

அறிவிப்பவர்:  அபூ உமாமா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 22267)

حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَهْرَامَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ ، حَدَّثَنِي أَبُو أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«أَيُّمَا رَجُلٍ قَامَ إِلَى وَضُوئِهِ يُرِيدُ الصَّلَاةَ، ثُمَّ غَسَلَ كَفَّيْهِ نَزَلَتْ خَطِيئَتُهُ مِنْ كَفَّيْهِ مَعَ أَوَّلِ قَطْرَةٍ، فَإِذَا مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ نَزَلَتْ خَطِيئَتُهُ مِنْ لِسَانِهِ وَشَفَتَيْهِ مَعَ أَوَّلِ قَطْرَةٍ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ نَزَلَتْ خَطِيئَتُهُ مِنْ سَمْعِهِ وَبَصَرِهِ مَعَ أَوَّلِ قَطْرَةٍ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَرِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ سَلِمَ مِنْ كُلِّ ذَنْبٍ هُوَ لَهُ، وَمِنْ كُلِّ خَطِيئَةٍ كَهَيْئَتِهِ يَوْمَ وَلَدَتْهُ أُمُّهُ» . قَالَ: «فَإِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ اللَّهُ بِهَا دَرَجَتَهُ، وَإِنْ قَعَدَ قَعَدَ سَالِمًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22267.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21680.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…

பார்க்க : குப்ரா நஸாயீ-10575 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.