நபி (ஸல்) அவர்கள்அவர்கள், “ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். பரவும் நோயால் இறந்தவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது வயிற்றில் குழந்தை உள்ள நிலையில் மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22685)حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ الْغَازِ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَا تَعُدُّونَ الشَّهِيدَ فِيكُمْ؟» قَالُوا: الَّذِي يُقَاتِلُ فَيُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ الْقَتِيلُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْمَطْعُونُ شَهِيدٌ، وَالْمَبْطُونُ شَهِيدٌ، وَالْمَرْأَةُ تَمُوتُ بِجُمْعٍ شَهِيدٌ» يَعْنِي النُّفَسَاءَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21628.
Musnad-Ahmad-Shamila-22685.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22077.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களுக்கும், உபாதா பின் நுஸய்யி (ரஹ்) அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார்…
மேலும் பார்க்க : அஹ்மத்-17797 .
சமீப விமர்சனங்கள்