அபூ அப்துல்லாஹ் அஸ்ஸுனாபிஹீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமுஹம்மது என்பவர் வித்ருத் தொழுகை கடமையான தொழுகை என்று எண்ணிக் கொண்டிருந்தார். (இது பற்றி உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது) அவர்கள், அபூமுஹம்மது பொய் கூறுகிறார்.
“ஐந்து நேரத் தொழுகைகளை, அல்லாஹ் தனது அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். யார் அழகிய முறையில் உளூச் செய்து அவைகளை அதற்குரிய நேரத்தில் தொழ நின்று, இறையச்சத்துடன் ருகூஉ ஸஜ்தாக்களை முழுமையாக செய்து நிறைவேற்றுகின்றாரோ அவரை அல்லாஹ் மன்னிப்பான் என்ற வாக்குறுதி அல்லாஹ்விடத்தில் உண்டு.
யார் அவைகளை சரியாக நிறைவேற்றவில்லையோ அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் அந்த வாக்குறுதி இல்லை. அவன் நாடினால் மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று சாட்சி கூறுகிறேன் என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 22704)حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيّ قَالَ:
زَعَمَ أَبُو مُحَمَّدٍ أَنَّ الْوَتْرَ وَاجِبٌ، فَقَالَ: عُبَادَةُ بْنُ الصَّامِت كَذَبَ أَبُو مُحَمَّدٍ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللَّهُ عَلَى عِبَادِهِ مَنْ أَحْسَنَ وُضُوءَهُنَّ وَصَلَّاهُنَّ لِوَقْتِهِنَّ، فَأَتَمَّ رُكُوعَهُنَّ وَسُجُودَهُنَّ وَخُشُوعَهُنَّ كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يَغْفِرَ لَهُ، وَمَنْ لَمْ يَفْعَلْ فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ غَفَرَ لَهُ، وَإِنْ شَاءَ عَذَّبَهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22704.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22095.
சமீப விமர்சனங்கள்