தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22755

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத் தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமலும் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 22755)

حَدَّثَنَا هَارُونُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مَالِكُ بْنُ الْخَيْرِ الزِّبَادِيُّ، عَنْ أَبِي قَبِيلٍ الْمَعَافِرِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَيْسَ مِنْ أُمَّتِي مَنْ لَمْ يُجِلَّ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ لِعَالِمِنَا»

قَالَ عَبْدُ اللَّهِ: وَسَمِعْتُهُ أَنَا مِنْ هَارُونَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21693.
Musnad-Ahmad-Shamila-22755.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




மேலும் பார்க்க: ஹாகிம்-421 .

3 comments on Musnad-Ahmad-22755

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    முஸ்னத் அஹ்மத் 22755

    இந்த ஹதீஸின் தரம் அப்டேட் செய்யுங்கள்.

    1. வ அலைக்கும் ஸலாம். இதில் இடம்பெறும் அபூகபீல் அவர்கள், உபாதா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது. இதற்கு ஆதாரம் உள்ளதா என்று பார்த்துவிட்டு பதிவு செய்கிறோம்.

      இந்த அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் உள்ளது என்பதின் படி சிலர், “அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத் தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமல்” என்ற பகுதியை பலவீனமானது என்றும், வேறு சிலர் இந்த அறிவிப்பாளர்தொடரை சரி என்று கூறுவதால் இந்தக் கருத்தையும் சரியானது என்றும் கூறியுள்ளனர்.

      எனவே இதில் எது சரியானது என்பதை தகுந்த ஆதாரத்தின்படி முடிவு செய்து பதிவு செய்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.