உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சில நபித்தோழர்களுடன் (எனக்கு ஏற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று தடவை கேட்டார்கள். நபித்தோழர்கள் அமைதியாக இருந்தனர். அப்போது உபாதாவாகிய நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நீங்களே அதைப்பற்றி தெரிவித்து விடுங்கள் என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார். அவளை அவளின் குழந்தை தனது தொப்புள்கொடியால் சொர்க்த்திற்கு இழுத்துச் செல்லும்” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 22784)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا أَبُو بَحْرٍ عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ يَعْلَى بْنِ شَدَّادٍ قَالَ: سَمِعْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ يَقُولُ:
عَادَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَنِ الشُّهَدَاءُ مِنْ أُمَّتِي؟» ، مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَسَكَتُوا. فَقَالَ: عُبَادَةُ أَخْبِرْنَا يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ: «الْقَتِيلُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْمَبْطُونُ شَهِيدٌ، وَالْمَطْعُونُ شَهِيدٌ، وَالنُّفَسَاءُ شَهِيدٌ يَجُرُّهَا وَلَدُهَا بِسُرَرِهِ إِلَى الْجَنَّةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22784.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22192.
إسناد ضعيف فيه عيسى بن سنان القسملي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூ ஸினான் என்ற ஈஸா பின் ஸினான் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க : அஹ்மத்-17797 .
சமீப விமர்சனங்கள்