தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23568

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காலையில், “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, யுஹ்யீ வ யுமீத்து வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவனே உயிர்க் கொடுப்பவன். அவனே மரணிக்கச் செய்பவன். அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

என்று பத்து முறை சொல்கிறவருக்கு ஒவ்வொரு முறைக்கும் பத்து நன்மைகளை அல்லாஹ் எழுதுகிறான். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) பத்து தீமைகளை அல்லாஹ் அழிக்கிறான். சொர்க்கத்தில் அவருக்கு பத்து அந்தஸ்துகளை உயர்த்துகிறான். மேலும் அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமான நற்பலன் பெற்றுக் கொடுக்கும். மேலும் பகலின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அது அவருக்கு பாதுகாக்கும் அரணாக இருக்கும். இந்த நன்மையை மிகைக்கும் வேறு எந்த நன்மையையும் அவரால் செய்துவிடமுடியாது.

காலையில் கூறியதற்கு கிடைக்கும் நன்மை போன்றே இதை மாலையில் கூறினாலும் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரீ (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 23568)

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي رُهْمٍ السَّمَعِيِّ ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:

مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، عَشْرَ مَرَّاتٍ، كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ وَاحِدَةٍ قَالَهَا عَشْرَ حَسَنَاتٍ، وَحَطَّ اللَّهُ عَنْهُ بِهَا عَشْرَ سَيِّئَاتٍ، وَرَفَعَهُ اللَّهُ بِهَا عَشْرَ دَرَجَاتٍ، وَكُنَّ لَهُ كَعَشْرِ رِقَابٍ، وَكُنَّ لَهُ مَسْلَحَةً مِنْ أَوَّلِ النَّهَارِ إِلَى آخِرِهِ، وَلَمْ يَعْمَلْ يَوْمَئِذٍ عَمَلًا يَقْهَرُهُنَّ، فَإِنْ قَالَ حِينَ يُمْسِي، فَمِثْلُ ذَلِكَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23568.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22946.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம் வாசிகளிடமிருந்து அறிவிக்கும் செய்தி சரியானதாகும். ஸஃப்வான் பின் அம்ர் ஷாம்வாசி என்பதால் இது சரியான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் பார்க்க : திர்மிதீ-3474 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.