அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு கடினமான சிவப்புநிற இரு ஆடைகள் இருந்தது. அவர்கள் அமர்ந்து (பேசும் போது) வியர்வை வெளிப்படுவதினால் அந்த இரு ஆடைகளும் அவர்களுக்கு கஷ்டத்தை அளித்தன. ஷாம் நாட்டிலிருந்து ஒரு யூத நபருக்கு துணிகள் வந்தது. அப்போது நான் (நபியவர்களிடம்) தாங்கள் அந்த யூதரிடம் ஆள் அனுப்பி குறுகிய காலத்தில் (பணத்தை ஒப்படைப்பதாகக் கூறி) இரண்டு துணிகளை வாங்கிக்கொள்ளலாமே என்று கூறினேன்.
நபி (ஸல்) அவர்களும் அவனிடம் ஆள் அனுப்பி (வாங்கி வரச் சொன்னார்கள்). அதற்கு அவன் முஹம்மத் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியும். என்னுடைய பொருளை பறித்துச் செல்லத்தான் அவர் நாடுகிறார் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் அவர்களை விட அதிகம் அல்லாஹ்விற்கு அஞ்சுபவன் என்றும் அதிகம் அமானிதத்தை ஒப்படைப்பவன் என்றும் அவர் அறிந்துகொண்டு பொய் சொல்கிறார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 25141)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُمَارَةَ يَعْنِي ابْنَ أَبِي حَفْصَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ:
كَانَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَانِ عُمَانِيَّانِ، – أَوْ قَطَرِيَّانِ – فَقَالَتْ لَهُ عَائِشَةُ: إِنَّ هَذَيْنِ ثَوْبَانِ غَلِيظَانِ تَرْشَحُ فِيهِمَا، فَيَثْقُلَانِ عَلَيْكَ، وَإِنَّ فُلَانًا قَدْ جَاءَهُ بَزٌّ، فَابْعَثْ إِلَيْهِ يَبِيعُكَ ثَوْبَيْنِ إِلَى الْمَيْسَرَةِ. فَبَعَثَ إِلَيْهِ يَبِيعُهُ ثَوْبَيْنِ إِلَى الْمَيْسَرَةِ قَالَ: قَدْ عَرَفْتُ مَا يُرِيدُ مُحَمَّدٌ، إِنَّمَا يُرِيدُ أَنْ يَذْهَبَ بِثَوْبَيَّ – أَوْ لَا يُعْطِينِي دَرَاهِمِي – فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ شُعْبَةُ: أُرَاهُ قَالَ: «قَدْ كَذَبَ، لَقَدْ عَرَفُوا أَنِّي أَتْقَاهُمْ لِلَّهِ عَزَّ وَجَلَّ» أَوْ قَالَ: «أَصْدَقُهُمْ حَدِيثًا، وَآدَاهُمْ لِلْأَمَانَةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-25141.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-24577.
சமீப விமர்சனங்கள்