தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-27352

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஹுசைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்திருந்தார். தேவையை முடித்துக் கொண்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உமக்கு கணவர் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார், நபி(ஸல்) அவர்கள் அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்துக்கொள்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலே தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்கமாட்டேன் என்று கூறினார். நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்துக் கொள்கிறாய் என்பதை கவனித்துக்கொள் ஏனென்றால் அவர்தான் உனது சொர்க்கமாகும், உனது நரகமுமாகும். என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுசைன் பின் மிஹ்ஸன் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 27352)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَيَعْلَى قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ حُصَيْنِ بْنِ مِحْصَنٍ

أَنَّ عَمَّةً لَهُ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فَفَرَغَتْ مِنْ حَاجَتِهَا، فَقَالَ لَهَا: «أَذَاتُ زَوْجٍ أَنْتِ؟» ، قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَأَيْنَ أَنْتِ مِنْهُ؟» – قَالَ يَعْلَى: «فَكَيْفَ أَنْتِ لَهُ؟» – قَالَتْ: مَا آلُوهُ إِلَّا مَا عَجَزْتُ عَنْهُ، قَالَ: «انْظُرِي أَيْنَ أَنْتِ مِنْهُ فَإِنَّهُ جَنَّتُكِ وَنَارُكِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27352.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26706.




மேலும் பார்க்க: அஹ்மத்-19003 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.