அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா (ரலி) அவர்களிடம் சென்று அவர்கள் விசயம் பற்றி ( அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத்தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும்) கேட்டேன்.
அதற்கு சுபைஆ பின்த் ஹாரிஸ் அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். (விடைபெறும் ஹஜ்ஜின் போது) ஸஅத் (ரலி) இறந்துவிட்டார்கள். அப்போது ‘நான்’ கர்ப்பமுற்றிருந்தேன். ஸஅத் (ரலி) அவர்கள் இறந்து இரண்டு மாதம் தான் ஆனது; (அதற்குள்) நான் பிரசவித்துவிட்டேன்.
மேலும் கூறினார்கள்:
( நான் உதிரப் போக்கிலிருந்து சுத்தமானபோது) பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான ‘அபுஸ் ஸனாபில் இப்னு பஃகக் (ரலி) என்னை பெண் பேச விருப்பம் தெரிவித்தார்.
அவர் என்னிடம் பெண்பேச வரும் போது நான் மருதாணியிட்டு, அலங்கரித்துக் கொண்டேன். அப்போது, அவர், சுபைஆ என்ன விருப்பம் என்று கேட்டார். நான் (மறு)மணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனுடைய இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய ‘இத்தா’ காலமாகிய) நான்கு மாதம் பத்து நாள்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு) மணம் புரிந்து கொள்ள முடியாது’ என்று கூறினார்.
சுபைஆ (ரலி) கூறினார்:
(இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து) நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு, இறைத்தூதர் (ஸல்) (நீ பிரசவித்துவிட்டபோதே) மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்து கொள்’ என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்…
(முஸ்னது அஹ்மத்: 27438)حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ:
دَخَلْتُ عَلَى سُبَيْعَةَ بِنْتِ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيَّةِ، فَسَأَلْتُهَا عَنْ أَمْرِهَا فَقَالَتْ: كُنْتُ عِنْدَ سَعْدِ ابْنِ خَوْلَةَ فَتُوُفِّيَ عَنِّي فَلَمْ أَمْكُثْ إِلَّا شَهْرَيْنِ حَتَّى وَضَعْتُ قَالَتْ: فَخَطَبَنِي أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ أَخُو بَنِي عَبْدِ الدَّارِ فَتَهَيَّأْتُ لِلنِّكَاحِ قَالَتْ: فَدَخَلَ عَلَيَّ حَمْوِي وَقَدِ اخْتَضَبْتُ وَتَهَيَّأْتُ فَقَالَ: مَاذَا تُرِيدِينَ يَا سُبَيْعَةُ قَالَتْ: فَقُلْتُ: أُرِيدُ أَنْ أَتَزَوَّجَ قَالَ: وَاللَّهِ مَا لَكِ مِنْ زَوْجٍ حَتَّى تَعْتَدِّينَ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، قَالَتْ فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِي: «قَدْ حَلَلْتِ فَتَزَوَّجِي»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27438.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-27438
.
إسناده حسن رجاله ثقات عدا ابن إسحاق القرشي وهو صدوق مدلس ، رجاله رجال البخاري عدا ابن إسحاق القرشي روى له البخاري
تعليقًا
மேலும் பார்க்க : புகாரி-3991 .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
இந்த ஹதீஸின் தமிழாக்கம் பதிவிடவில்லையே…
ஸலாம், ஜஸாகல்லாஹு கைரா, தமிழாக்கம் பதிவிடப்பட்டுள்ளது.