ஒரு அடியானுக்குத் துன்பமோ, கவலையோ ஏற்படும் போது
அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்தி(க்)க, வப்னு அம(த்)திக, நாசிய(த்)தீ பியதிக, மாளின் ஃபிய்ய ஹுக்முக, அத்லுன் ஃபிய்ய களாவுக, அஸ்அலு(க்)க பிகுல்லி இஸ்மின் ஹுவ லக ஸம்மய்த்த பிஹி நஃப்ஸக அவ் அன்ஸல்த்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதம் மின் கல்கிக, அவ் இஸ்தஃஸர்த்த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ, வநூர ஸத்ரீ, வஜிலாஅ ஹுஸ்னீ, வதஹாப ஹம்மீ”
(பொருள்: அல்லாஹ்வே நான் உன்னுடைய அடியான். உன் அடியானின் மகன். உனது பெண் அடிமையின் மகன். என்னுடைய நெற்றி முடி உன் கையில் இருக்கிறது. என் விஷயத்தில் உன்னுடைய தீர்ப்பு செல்லுபடியாகும். என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது.
இறைவா! இந்தக் குர்ஆனை என்னுடைய உள்ளத்தின் வசந்தமாகவும், என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும், என்னுடைய கவலை அகற்றியாகவும், துன்பம் நீக்கியாகவும் நீ ஆக்க வேண்டும். உனக்கு நீயே சூட்டிக் கொண்ட, அல்லது உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி வைத்த, அல்லது உன்னுடைய படைப்பினங்களில் யாருக்காவது நீ கற்றுக் கொடுத்த, அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்ட உனது அத்தனை பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடத்தில் வேண்டுகிறேன்.)
என்று கூறினால் அல்லாஹ் அவருடைய கவலையைப் போக்கி விடுவான். அவருடைய கவலையின் இடத்தில் சந்தோஷத்தைப் பகரமாக்கி விடுவான்.
“அல்லாஹ்வின் தூதரே! இந்த வார்த்தைகளை நாங்கள் கற்றுக் கொள்வது எங்களுக்கு அவசியமானதா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள், “அவற்றை யார் செவியுறுகிறாரோ அவர் அதைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்” என்று கூறினார்கள்…
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 3712)حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ الْجُهَنِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَا أَصَابَ أَحَدًا قَطُّ هَمٌّ وَلَا حَزَنٌ، فَقَالَ: اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجِلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي، إِلَّا أَذْهَبَ اللَّهُ هَمَّهُ وَحُزْنَهُ، وَأَبْدَلَهُ مَكَانَهُ فَرَحًا “، قَالَ: فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَتَعَلَّمُهَا؟ فَقَالَ: «بَلَى، يَنْبَغِي لِمَنْ سَمِعَهَا أَنْ يَتَعَلَّمَهَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-4091.
Musnad-Ahmad-Shamila-3712.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-3583.
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا أبو سلمة الجهني وهو مجهول الحال (جوامع الكلم)
- இச்செய்தியில் இடம்பெறும் அபூ ஸலமா அல் ஜுஹனி என்பவர் (மஜ்ஹூல்) யாரென்று அறியப்படாதவர் ஆவார். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சமீப விமர்சனங்கள்