மதீனாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்து சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு அந்தளவு இடம் அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 6656)حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنِي حُيَيُّ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ:
تُوُفِّيَ رَجُلٌ بِالْمَدِينَةِ، فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا لَيْتَهُ مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ» ، فَقَالَ رَجُلٌ مِنَ النَّاسِ: لِمَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ إِذَا تُوُفِّيَ فِي غَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ، فِي الْجَنَّةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6656.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6479.
إسناد ضعيف فيه عبد الله بن لهيعة الحضرمي وهو ضعيف الحديث ، وحيي بن عبد الله المعافري وهو ضعيف الحديث (جوامع الكلم)
- இதில் வரும் حيي بن عبد الله المعافري ஹுயை பின் அப்துல்லாஹ் என்பவரும், عبد الله بن لهيعة الحضرمي ராவீ-25382-அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவரும் பலவீனமானவர்கள்.
- இவரைப் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹம்பல் அவர்கள் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனக் கூறுகிறார்கள். - இவர் விஷயத்தில் விமர்சனம் உள்ளது என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
கூறுகிறார்கள். - இவர் பலமான அறிவிப்பாளர் அல்லர் என்று நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் கூறுகிறார்கள்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-6656 , இப்னு மாஜா-1614 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-1832 , இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,
சமீப விமர்சனங்கள்