தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7160

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து அமர்ந்து, வானத்தைப் பார்த்தார். அப்போது ஒரு வானவர் இறங்கி வந்துக்கொண்டிருந்தார். இவர் படைக்கப்பட்டதிலிருந்து இதற்கு முன் வரை பூமியில் இறங்கியதில்லை என்று ஜிப்ரீல் (அலை) கூறினார்.

அந்த வானவர் இறங்கி, “முஹம்மதே! உங்களை அரசனாகவும், நபியாகவும் ஆக்க வேண்டுமா? அல்லது அல்லாஹ்வின் அடியாராகவும், அவனின் தூதராகவும் ஆக்க வேண்டுமா? என்று கேட்டு வர உமது இறைவன் என்னை அனுப்பினான் என்று கூறினார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள், முஹம்மதே! உமதிறைவனிடம் பணிந்து விடுங்கள் என்று கூறினார்.

எனவே நபி (ஸல்) அவர்கள், அந்த வானவரிடம் “என்னை அல்லாஹ்வின் அடியாராகவும், அவனின் தூதராகவும் ஆக்க வேண்டும்” என்பதையே நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 7160)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، قَالَ: وَلَا أَعْلَمُهُ إِلَّا عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

جَلَسَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَظَرَ إِلَى السَّمَاءِ، فَإِذَا مَلَكٌ يَنْزِلُ، فَقَالَ جِبْرِيلُ: إِنَّ هَذَا الْمَلَكَ مَا نَزَلَ مُنْذُ يَوْمِ خُلِقَ، قَبْلَ السَّاعَةِ، فَلَمَّا نَزَلَ قَالَ: يَا مُحَمَّدُ، أَرْسَلَنِي إِلَيْكَ رَبُّكَ،: أَفَمَلِكًا نَبِيًّا يَجْعَلُكَ، أَوْ عَبْدًا رَسُولًا؟ قَالَ جِبْرِيلُ: تَوَاضَعْ لِرَبِّكَ يَا مُحَمَّدُ. قَالَ: «بَلْ عَبْدًا رَسُولًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7160.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6987.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-7160 , முஸ்னத் பஸ்ஸார்-9807 , முஸ்னத் அபீ யஃலா-6105 , இப்னு ஹிப்பான்-6365 ,

more hadees…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.