தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7991

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

சுலைமான் பின் யஸார் அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் மதீனாவில் இருந்த ஒரு இமாமைக் குறித்து கூறும் போது  ‘‘நபி (ஸல்) அவர்களின் தொழுகைக்கு மிகவும் ஒப்பான தொழுகையை இன்னாரை விட வேறு யார் பின்னாலும் நான் தொழுததில்லை” என்று கூறினார்கள்.

சுலைமான் பின் யஸார் கூறுகிறார்: நான் அந்த மனிதருக்குப் பின்னால் தொழுதேன். அவரை லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளை நீட்டுபவராகவும், இறுதி இரண்டை சுருக்குபவராகவும் கண்டேன். மேலும் அவர் அஸரை சுருக்கமாகத் தொழுதார். மஃக்ரிபில் முதலிரண்டு ரக்அத்துகளில்  சுருக்கமான (கிஸாருல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களை ஓதுபவராகவும், இஷாவில் முதலிரண்டு ரக்அத்துகளில் நடுத்தர (வஸ்தில் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களை ஓதுபவராகவும்  சுப்ஹிலே நீளமான (திவாலுல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களை ஓதுபவராகவும் கண்டேன்.

(முஸ்னது அஹ்மத்: 7991)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ:

مَا صَلَّيْتُ وَرَاءَ أَحَدٍ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَشْبَهَ صَلَاةً بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فُلَانٍ – قَالَ سُلَيْمَانُ – «كَانَ يُطِيلُ الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ، وَيُخَفِّفُ الْأُخْرَيَيْنِ، وَيُخَفِّفُ الْعَصْرَ، وَيَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ، وَيَقْرَأُ فِي الْعِشَاءِ بِوَسَطِ الْمُفَصَّلِ، وَيَقْرَأُ فِي الصُّبْحِ بِطِوَالِ الْمُفَصَّلِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-7650.
Musnad-Ahmad-Shamila-7991.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7793.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.