தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

முதவாதிர்

---

ஹதீஸின் வகைககள்

அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கவனித்து ஹதீஸ் இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.

1. முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)

2. கபருல் ஆஹாத் (தனிநபர் செய்தி)

 

முதவாதிர்

(அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு தலைமுறையிலும் பலர் ஒருமித்து அறிவிப்பது)

ஒரு செய்தியை ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர். தாபியீன்களிலும் ஏராளமானவர்கள் அறிவிக்கின்றனர். தபவுத் தாபியீன்களிலும் அதேபோன்று பலர் அறிவிக்கின்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையிலும் ஏராளமானவர்கள் அறிவித்துள்ளார்கள் எனில் இத்தகைய செய்திகளை ஹதீஸ் கலையில் முதவாதிர் என்று சொல்லப்படும். இந்தத் தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் குறைவாகவே உள்ளன.

உதாரணம்:

“என் மீது யார் வேண்டுமென்றே பொய் சொல்கிறானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
திர்மிதீ உள்ளிட்ட ஏராளமான நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் அறிவிக்கின்றார்கள்.

இப்படியே ஒவ்வொரு தலைமுறையிலும் எண்ணற்றவர்கள் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒன்பதுக்கும் மேற்பட்டவர்களால் அறிவிக்கப் படுவதே “முதவாதிர்” என்று குறிப்பிடப்படும். முதவாதிர் குறித்த ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தில் இதுவே பிரபலமான கருத்தாகும்.



7 comments on முதவாதிர்

  1. கண் திருஷ்டி சம்மந்தமாக ஹதீஸ்கள் பல அறிவிப்பாளர் தொடர்களில் வருகிறது இதுவும் முதவாதிர் தரத்தில் வருமா? விளக்கம் தரவும்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      முதவாதிர் ஹதீஸ்களை அறிவிக்கும் நபித்தோழர்களை விட குர்ஆனை நம்மிடம் சேர்த்த நபித்தோழர்கள் அதிகம் என்பதால் எந்த செய்தியாக இருந்தாலும் குர்ஆனுக்கு முரண்படும் போது அதை மறுப்பதே சரியானதாகும்.

      1. அஸ்ஸலாமு அலைக்கும்.

        நான் உங்ககள் தளத்தில் கண்ணேறு என்ற வார்த்தை கொண்டு தேடி பார்த்தேன் 20 ஹதீஸ்கள் காட்டுகின்றன பல அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்படுகின்றன .உதாரணத்திற்கு ஆதாரப்பூர்வமான மொத்த ஹதீஸ் கிதாபில் குறைந்தது 10 ஹதீஸ்கள் வைத்துக்கொள்ளோம் இதில் தோராயமாக ஒரு ஹதீஸிற்கு 5 நபர்கள் ராவிகளாக வருவார்கள் என்றால் 10×5=50 நபர்கள் வருகிறார்கள்.

        1)இதில் எனக்கு சந்தேகம் என்னவென்றாள் ? எப்படி ஒரு பொய்யான செய்தியை எப்படி எல்லோரும் சேர்ந்தார் போல் அறிவிக்க முடியும். ஏனென்றால் பொய் சொன்னாலும் வெவ்வேறு நபர்கள் எப்படி அதே பொய்யை சொல்லிவைத்தார் போல் சொல்வார்கள். இயல்பிலேயே முடியாது அல்லவா?

        2)மேலும் இந்த செய்திகளை ஹதீஸ் கலையில் எந்த தரத்தில் சேர்ப்பீற்கள் பலகீனமானதா? அல்லது இட்டுக்கட்டப்பட்டதா?

        3)பலகீனமானது என்றால் பலகீனமான நபரை குறிப்பிடவேண்டும் இதில் நாம் அப்படி யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை என்று உங்கள் கட்டுரையை படித்து தெரிந்துகொண்டேன்.

        4)இது இட்டுக்கட்டபட்ட செய்தி என்றால் இந்தனை பேர் நம்பகமானவர் வழியாக வரும் செய்தியில் இட்டுக்கட்ட முடியும் என்றால் அதை புகாரீ போன்ற இமாம்களும் தெரியாமல் நம்பகமானது என்று சொல்கிறார்கள் என்றால் அவர்கள் பதிந்த ஒட்டு மொத்த ஹதீஸ்களிலும் ஒரு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும் அல்லவா?

        5)குர்ஆனுக்கு முரண் என்று சொல்கிறீர்கள் ஆனால் கண்திருஷ்டி என்பது பொய் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லப்படும் எந்த குரான் வசனத்தையும் நீங்கள் சுட்டிக்காட்டவில்லை. பொதுவான வசனங்களை எடுத்துக்கொண்டு இதை கந்திருஷ்டியோடு தொடர்பு படுத்துகிறீர்கள்.

        6)
        68:51 وَاِنْ يَّكَادُ الَّذِيْنَ كَفَرُوْا لَيُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ‌ۘ‏
        68:51. மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.

        ”தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்” என்று பார்வையால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று கூறுகிறது.

        தயவுசெய்து விளக்கம் தரவும்

        1. அஸ்ஸலாமு அலைக்கும்.

          பார்வையில் வீழ்த்துவது என்பது இங்கு முறைத்தல், கோபமாக பார்த்தல் என்ற கருத்தில் வந்துள்ளது. நீங்கள் சொல்வது போன்று கண்திருஷ்டி என்பது பொருத்தமானதல்ல. பார்வையினால் சுட்டான் என்று கூட தமிழ் வழக்கில் உள்ளது. அதுபோன்று தான் இது.
          زلق என்றால் வழுக்கி விழுதல். أزلق அஸ்லக-வழுக்கி விழச்செய்தல் என்ற பொருள்படியே பார்வையில் வீழ்த்துவது என்ற பொருளின் அடிப்படையில் தான் கோபமாக பார்த்தல் என்ற விளக்கம் கூறப்பட்டுள்ளது. பார்க்க:கண்ணேறு

          1. அந்த வசனத்தில் يُزْلِقُوْ என்பதன் வேர்ச்சொல் زلق இது நிலையில்லாமல் வலுக்கி விழுதல் என்ற அர்த்தத்தையே தருகிறது. 18:40 என்ற வசனத்திலும் இதே அர்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

          2. அஸ்ஸலாமு அலைக்கும்.
            ஹதீஸ் கலை இமாம்கள் கண்திருஷ்டி சம்பந்தமான ஹதீஸ்களை நீங்கள் சொல்லும் காரணங்களால் மறுத்துள்ளார்களா?

          3. அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் கேள்வியில் நியாயம் உள்ளது,
            ”ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்”
            (அறி: அபூஹுரைரா(ரலி), முஸ்லிம்), எனவே, தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதனால் ஏற்படும் பெரும்பாவத்தை விட்டும், நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.

            தற்போது ஹதீஸ்களை பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. எழுத்துப்பிழைகள், தரம் பற்றிய தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால், அதற்கு முன்னுரிமை தரப்படும். ஒரு ஹதீஸ் ஆய்விற்கு பல நாட்கள் தேவைப்படும். எனவே, விரிவான ஆய்வுகள், விமர்சனங்கள் பற்றிய செய்திகளுக்கு பிறகு பதிலளிக்கப்படும். இன்ஷா அல்லாஹ், எந்தக் கேள்வியும் பதில் அளிக்காமல் விடப்படாது. ஒத்துழைப்பு தாருங்கள். உங்கள் ஒத்துழைப்பு இன்றி எங்களால் இந்த பணியை சரியாக செய்ய முடியாது. இறைவனின் கட்டளைப்படி, நாம் அனைவரும் அழகான, கண்ணியமான முறையில் விவாதித்துக் கொள்வோம். ஸலாம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.