முத்ரஜ்
ஹதீஸ்கலையில் “முத்ரஜ்” என்ற ஒரு வகை உள்ளது.
அதாவது, அறிவிப்பாளரின் சொந்தக் கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று இடம் பெற்று விடும். இதற்கு இடைச் செருகல் (முத்ரஜ்) என்று கூறுவர்.
இது போன்ற இடங்களில் இந்த வார்த்தை, யாரோ ஒரு அறிவிப்பாளரால் அறிந்தோ, அறியாமலோ நுழைக்கப்பட்டது என்று கண்டுப்பிடிப்பதற்குப் பல வழிமுறைகளை ஹதீஸ்கலை மேதைகளான இமாம்கள் குறிப்பிடுகிறார்கள்.
(ஒரு செய்தியில் இடைச்செருகலாக உள்ள வார்த்தை அல்லது வாக்கியத்தை அறிந்துக் கொள்ளும் முறைகள்:
1 . ஒரு செய்தியில் இடம்பெறும் சில குறிப்பிட்ட வாக்கியத்தை அதே நபித்தோழர் வழியாக வேறு அறிவிப்பாளர் நபித்தோழரின் கூற்றாக அறிவித்திருப்பது.
2 . ஒரு செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளரே வேறு அறிவிப்பாளர்தொடரில் குறிப்பிட்ட வாக்கியத்தை நபித்தோழரின் கூற்று என்று கூறியிருப்பது (அல்லது அது நபியின் கூற்றா? அல்லது நபித்தோழரின் கூற்றா? என்று சந்தேகமாக அறிவித்திருப்பது)
3 . ஹதீஸ்கலையில் திறன்படைத்த அறிஞர்கள் அதைக் குறிப்பிட்டிருப்பது.)
4. “நபி(ஸல்) அவர்கள் இந்த வாசகத்தைக் கூறுவது அசாத்தியமானது என்று முடிவெடுப்பது”.
[مراتب الإدراج:]
أحدها: أن يكون ذلك في أول المتن وهو نادر جدا.
ثانيها: أن يكون في آخره، وهو الأكثر.
ثالثها: أن يكون في الوسط، وهو قليل.
ثم قد يكون المدرج من قول الصحابي أو التابعي أو من بعده.
[وجوه معرفة المدرج:]
والطريق إلى معرفة ذلك من وجوه:
الأول: أن يستحيل إضافة ذلك إلى النبي – صلى الله عليه وسلم -.
الثاني: أن يصرح الصحابي بأنه لم يسمع تلك الجملة من النبي – صلى الله عليه وسلم -.
الثالث: أن يصرح بعض الرواة بتفصيل المدرج فيه عن المتن المرفوع فيه بأن يضيف الكلام إلى قائله.
مثال الأول: وهو ما لا تصح إضافته إلى النبي – صلى الله عليه وسلم -.
حديث ابن مبارك، عن يونس، عن الزهري، عن سعيد بن المسيب، عن أبي هريرة – رضي الله عنه – قال: قال رسول الله – صلى الله عليه وسلم -: “للعبد المملوك أجران /(?160/أ) ، والذي نفسي بيده لولا الجهاد في سبيل الله والحج وبر أمي لأحببت أن أموت وأنا مملوك” 1. رواه البخاري عن بشر بن محمد عن ابن المبارك.
فهذا الفصل الذي في آخر الحديث لا يجوز أن يكون من قول النبي – صلى الله عليه وسلم – إذ يمتنع عليه أن يتمنى أن يصير مملوكا – وأيضا فلم يكن له أم يبرها، بل هذا من قول أبي هريرة – رضي الله عنه – أدرج في المتن .
وقد بينه حيان بن موسى عن ابن المبارك، فساق الحديث إلى قوله “أجران” فقال فيه: “والذي نفس أبي هريرة بيده..” إلى آخره.
وهكذا هو في رواية ابن وهب عند مسلم وهذا/(ر149/أ) من فوائد المستخرجات كما قدمناه.
ومثال الثاني: حديث ابن مسعود – رضي الله عنه – عن النبي – صلى الله عليه وسلم -:
“من/(ي277) مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة”، “ومن مات وهو يشرك بالله شيئا دخل النار”.
هكذا رواه أحمد بن عبد الجبار العطاردي1، عن أبي بكر ابن عياش بإسناده ووهم فيه. فقد رواه الأسود بن عامر شاذان1 وغيره عن أبي بكر بن عياش بلفظ: سمعت رسول الله – صلى الله عليه وسلم – يقول: “من جعل لله عز وجل ندا دخل النار” وأخرى أقولها – ولم أسمعها منه – صلى الله عليه وسلم -2: “من مات لا يجعل لله ندا أدخله الجنة” .
والحديث في “صحيح مسلم”3 من غير هذا الوجه عن ابن مسعود – رضي الله عنه – ولفظه: قال رسول الله – صلى الله عليه وسلم – كلمة وقلت أخرى فذكره.
فهذا كالذي قبله في الجزم بكونه مدرجا. ومثال الثالث: ما ذكره المصنف1 من حديث ابن مسعود – رضي الله تعالى عنه – وقوله: “فإذا قلت هذا، فقد قضيت صلاتك”2.
ومنه – أيضا – حديث عبد الله بن خيران3، عن شعبة، عن أنس بن سيرين، أنه سمع ابن عمر – رضي الله تعالى عنهما – يقول: “طلقت امرأتي وهي حائض، فذكر عمر – رضي الله تعالى عنه – ذلك للنبي – صلى الله عليه وسلم – فقال: “مره فليراجعها، فإذا طهرت فليطلقها” قال: فتحسب تطليقة؟
قال: فمه؟
قال الخطيب: “هذا مدرج والصواب أن الاستفهام من قول ابن سيرين، وأن الجواب من ابن/(?160/ب) عمر – رضي الله تعالى عنهما”. بين ذلك محمد بن جعفر1 ويحيى بن سعيد القطان2، والنضر بن شميل3 وفي روايتهم عن شعبة.
قلت: وكذا فصله خالد بن الحارث4، وبهز بن أسد5 وسليمان بن حرب6 عن شعبة، وحديث بعضهم في الصحيحين.
وكذلك رواه مسلم7 من طريق عبد الملك بن أبي سليمان عن أنس بن سيرين.
قال الخطيب: “ورواه بشر بن عمر الزهراني8، عن شعبة فوهم فيه وهما فاحشا، فإنه قال فيه: “قال عمر – رضي الله عنه -: يا رسول الله.. أفتحتسب بتلك التطليقة؟ قال – صلى الله عليه وسلم -: “نعم”.
قلت: والحكم على هذا القسم الثالث بالإدراج يكون بحسب غلبة ظن المحدث الحافظ الناقد، ولا يوجب القطع/(ي278) بذلك خلاف القسمين الأولين، وأكثر هذا الثالث يقع تفسيرا لبعض الألفاظ الواقعة في الحديث كما في أحاديث الشغار1 والمحاقلة2 والمزابنة3.
(முத்ரஜை அறியும் வழிமுறைகளில் ஒன்று) நபியவர்களுடன் அதை இணைப்பது அசாத்தியமாவதாகும்.
(நுகத் அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ் பாகம் 2 / பக்கம் 812)
அதாவது, நபி (ஸல்) ஒருபோதும் இதுபோன்ற வார்த்தையைக் கூறியிருக்க மாட்டார்கள் என்று உளப்பூர்வமாக முடிவெடுப்பதாகும்.
முத்ரஜிற்கு உதாரணம்
فقوله : ” والذي نفسي بيده …. الخ ” من كلام أبي هريرة، لأنه يستحيل أن يصدر ذلك منه صلى الله عليه وسلم. لأنه لا يمكن أن يتمني الرَّقَّ، ولأن أمه لم تكن موجودة حتى يَبَرَّها.
“அடிமைக்கு இரண்டு கூலிகள் இருக்கிறது. என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்”(பார்க்க: புகாரி-2548) என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஹதீஸ் துறை இமாம்கள் எடுத்து சொல்லி முத்ரஜிற்கு உதரணமாக குறிப்பிட்டு விட்டு “என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்ற கூற்று அபூஹுரைராவுடைய கூற்றாகும்.
நபியவர்கள் இதைக் கூறுவதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால், நபியவர்கள் அடிமைத்தனத்தை ஆசைப்படவும் மாட்டாகள். மேலும் நபியவர்கள் தன்னுடைய தாய்க்குப் பணிவிடை செய்வதற்கு நபியவர்களின் தாயார் உயிரோடிருக்கவுமில்லை என்று கூறி மேற்கண்ட வாசகத்தை ஹதீஸ்கலை அறிஞர்கள் “முத்ரஜ்” என்று குறிப்பிடுகிறார்கள்.
(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 132)
இதே வழிமுறையைத் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்யும் போது அதனுடைய முரண்பாட்டை விளக்கிவிட்டு, ஒருபோதும் நபி (ஸல்) அவர்கள் வஹீ செய்திக்கு முரணாகப் பேசவே மாட்டார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறோம்.
இப்படிக் கூறுவதை ஹதீஸ் மறுப்பு கொள்கை என்று கூறினால், மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஹதீஸ்கலை விதியை, ஹதீஸ்கலையை தொகுத்த ஏராளமான இமாம்கள் கூறுகிறார்களே இவர்கள் அனைவரும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைப் போதிக்கிறார்கள் என்று நம்மை எதிர்ப்பவர்கள் கூறத்தயாரா?
இங்கே, ஒரு விஷயத்தை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
குர்ஆனில் இது போன்ற இடைச்செருகல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையினால்தான் குர்ஆனுடைய பாதுகாப்பிற்கும் ஹதீஸ்களுடைய பாதுகாப்பிற்கு மத்தியில் வித்தியாசம் இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். ஹதீஸ்களை மறுப்பதற்கல்ல.
பலவீனமான (ளயீஃபான) ஹதீஸ்கள் என்றால் என்ன?
https://tamil.quranandhadis.com/daif/