தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-114

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குளிப்பது எப்போது கடமையாகும்? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், அபூஸலமாவே! கோழிகளுடன் சேர்ந்து சப்தமிடும் கோழிக் குஞ்சு போன்றவர் நீர் என்பது உமக்குத் தெரியுமா? என்று கூறிவிட்டு, “பெண்ணுறுப்புடன் ஆணுறுப்பு சேர்ந்து விட்டால் குளிப்பது கடமையாகும்” என பதிலளித்தார்கள்.

(முஅத்தா மாலிக்: 114)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ قَالَ

سَأَلْتُ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا يُوجِبُ الْغُسْلَ؟ فَقَالَتْ: هَلْ تَدْرِي مَا مَثَلُكَ يَا أَبَا سَلَمَةَ مَثَلُ الْفَرُّوجِ يَسْمَعُ الدِّيَكَةَ تَصْرُخُ فَيَصْرُخُ مَعَهَا «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-114.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




(குறிப்பு: அபூஸலமாவே! கோழிகளுடன் சேர்ந்து சப்தமிடும் கோழிக் குஞ்சு போன்றவர் நீர் என்பது உமக்குத் தெரியுமா? என்று ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் கூறியதின் கருத்து, மற்றவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு, சொல்லும் குழந்தைத்தனம் உன்னிடம் உள்ளது என்பதாகும்.

காரணம் வேறு சில நபித்தோழர்கள் இந்திரியம் வெளிப்பட்டால் தான் குளிப்புக் கடமையாகும் என்று கூறியதை அபூஸலமா அவர்கள் ஆரம்பத்தில் பின்பற்றி மற்றவர்களுக்கும் கூறினார்கள். பிறகு தான் இதைப் பற்றி ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு தான், ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் இது போன்ற சட்டத்தை தெரிந்திருக்கும் என்னிடமே இதை ஆரம்பத்தில் கேட்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள்)

மேலும் பார்க்க: முஸ்லிம்-579 .

2 comments on muwatta-malik-114

  1. இந்த ஹதீஸில் தெரியுமா என்பதற்கு பதிலாக தொரியுமா என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. பிழை சரி செய்யப்பட்டு விட்டது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.