தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-115

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒரு விஷயத்தில் நபித் தோழர்கள் கொண்ட கருத்து வேறுபாடு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. அதை உங்கள் முன் (தீர்ப்புக்காக?) வைப்பதே சிறந்தது எனக் கருதுகிறேன் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) கூறினார்கள். அது என்ன? ”உன் தாயிடம் எதைப் பற்றிக் கேட்பீரோ, அதை என்னிடம் நீர் கேட்பீராக”” என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். ‘ஒருவர் தன் மனைவியிடம் (உடல் உறவு மூலம்) இணைகிறார். பின்பு விந்து வெளியாகாமலேயே பிரிந்தார். (இவர் குளிக்க வேண்டுமா?) என்று கேட்டார். ‘பெண்ணுறுப்புடன் ஆணுறுப்பு இணைந்து விட்டால் குளிப்பது கடமை” என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதும், உங்களுக்குப் பின்னால் யாரிடமும் இது பற்றி எப்போதும் கேட்க மாட்டேன் என அபூ மூஸா அல் அஷ் அரி(ரலி) கூறினார்கள் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.

(இதன் கருத்து முஸ்லிம், திர்மிதி யில் இடம் பெற்றுள்ளது).

(முஅத்தா மாலிக்: 115)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ

أَنَّ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ أَتَى عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهَا: لَقَدْ شَقَّ عَلَيَّ اخْتِلَافُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَمْرٍ، إِنِّي لَأُعْظِمُ أَنْ أَسْتَقْبِلَكِ بِهِ. فَقَالَتْ مَا هُوَ؟ مَا كُنْتَ سَائِلًا عَنْهُ أُمَّكَ، فَسَلْنِي عَنْهُ. فَقَالَ: الرَّجُلُ يُصِيبُ أَهْلَهُ ثُمَّ يُكْسِلُ وَلَا يُنْزِلُ؟ فَقَالَتْ: «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ». فَقَالَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ لَا أَسْأَلُ عَنْ هَذَا أَحَدًا، بَعْدَكِ أَبَدًا


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-115.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.