தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-222

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 48

உம்முல் குர்ஆன் பற்றி..

நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஃஹ்பு(ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் தொழுது கொண்டிருந்தார். தன் தொழுகையை அவர் முடித்ததும், நபி(ஸல்) அவர்களை சந்தித்தார். நபி(ஸல்) அவர்கள் தன் கையை அவாரின் கை மீது வைத்தார்கள். பள்ளிவாசலின் வாசல் வரை வருவதற்கு நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், தவ்றாத்திலும், இன்ஜீலிலும் அல்லாஹ் இறக்கிய ஒரு சூராவை குர்ஆனிலும் அது போன்று உள்ளதை நீ அறிந்து கொள்ளும் வரை பள்ளியிலிருந்து நீ வெளியேறாமல் இருக்க நான் விரும்புகின்றேன்; என்று கூறினார்கள். அவர்கள் விரும்பியபடி நான் என் நடையை சுருக்கினேன். பின்பு, இறைத்தூதர் அவர்களே! என்னிடம் வாக்குறுதி தந்தபடி அந்த சூரா பற்றி (கூறுங்கள்) என்று கேட்டேன். தொழுகையை ஆரம்பிக்கும் போது எப்படி ஓதுவாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்… என ஓதினேன். அதன் இறுதிக்கு நான் வந்ததும், அது இந்த சூரா தான். இது, புகழுக்குரிய 7 வசனங்களை உள்ளடக்கியதாகும். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள மகத்தான குர்ஆன் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஅத்தா மாலிக்: 222)

48- بَابُ مَا جَاءَ فِي أُمِّ الْقُرْآنِ

عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ، أَنَّ أَبَا سَعِيدٍ، مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ، أَخْبَرَهُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَادَى أُبَيَّ بْنَ كَعْبٍ وَهُوَ يُصَلِّي، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ لَحِقَهُ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَلَى يَدِهِ. وَهُوَ يُرِيدُ أَنْ يَخْرُجَ مِنْ بَابِ الْمَسْجِدِ. فَقَالَ: «إِنِّي لَأَرْجُو أَنْ لَا تَخْرُجَ مِنَ الْمَسْجِدِ حَتَّى تَعْلَمَ سُورَةً، مَا أَنْزَلَ اللَّهُ فِي التَّوْرَاةِ، وَلَا فِي الْإِنْجِيلِ، وَلَا فِي الْقُرْآنِ مِثْلَهَا»، قَالَ أُبَيٌّ فَجَعَلْتُ أُبْطِئُ فِي الْمَشْيِ رَجَاءَ ذَلِكَ. ثُمَّ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ السُّورَةَ الَّتِي وَعَدْتَنِي، قَالَ: «كَيْفَ تَقْرَأُ إِذَا افْتَتَحْتَ الصَّلَاةَ؟» قَالَ فَقَرَأْتُ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]، حَتَّى أَتَيْتُ عَلَى آخِرِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هِيَ هَذِهِ السُّورَةُ وَهِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُعْطِيتُ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-222.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.