தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2261

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் : 8

இறந்தவருக்காக உயிருள்ளவர், அடிமையை உரிமை விடுதல்.

அப்துர்ரஹ்மான் பின் அபூஅம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது தாயார் வஸிய்யத் செய்ய நாடினார். இயலாமையால் அதை செய்யவில்லை. அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவர்களின் விருப்பம் ஒரு அடிமையை விடுதலை செய்வதாக இருந்தது. எனவே நான் காஸிம் பின் முஹம்மது அவர்களிடம், நான் அடிமையை உரிமைவிட்டால் எனது தாயாருக்கு அதன் நன்மை பயனளிக்குமா என்று கேட்டேன்.

அதற்கு காஸிம் அவர்கள் (இப்படித்தான்) ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் அடிமையை உரிமை விட்டால் அவருக்கு நன்மை கிடைக்குமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள் என்று பதிலளித்தார்கள்.

(முஅத்தா மாலிக்: 2261)

8- عِتْقُ الْحَيِّ عَنِ الْمَيِّتِ.

حَدَّثَنِي مَالِكٌ، عَن عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ الأَنْصَارِيِّ،

أَنَّ أُمَّهُ أَرَادَتْ أَنْ تُوصِيَ، ثُمَّ أَخَّرَتْ ذَلِكَ إِلَى أَنْ تُصْبِحَ، فَهَلَكَتْ، وَقَدْ كَانَتْ هَمَّتْ بِأَنْ تُعْتِقَ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَقُلْتُ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ: أَيَنْفَعُهَا أَنْ أُعْتِقَ عَنهَا، فَقَالَ الْقَاسِمُ: إِنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ قَالَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: إِنَّ أُمِّي هَلَكَتْ، فَهَلْ يَنْفَعُهَا أَنْ أُعْتِقَ عَنهَا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: نَعَمْ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2261.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1340.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين القاسم بن محمد التيمي وسعد بن عبادة الأنصاري ، وباقي رجاله ثقات

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அல்காஸிம் பின் முஹம்மது (ரஹ்) அவர்கள், ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. எனவே இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-22458 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.