தொழுகையாளி ஒருவர் ஒரு தொழுகையையும், தான் தவற விட்ட தொழுகையையும் தொழுகின்றார். அதே நேரத்தில் தவற விட்டவை அவரது குடும்பத்தை விட, அவரது பொருளை விட மிகச் சிறந்தது, மிக உயர்ந்தது என யஹ்யா இப்னு யஸீத் கூறுவார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
”பயணத்தில் இருப்பவர் ஒரு (தொழுகை) நேரம் வந்ததும், மறந்தோ அசட்டையாகவோ இருந்து தன் குடும்பத்திடம் வரும் வரை தொழுகையை தாமதப்படுத்தி விட்டு, தன் குடும்பத்திடம் அதே நேரத்திலேயே வந்து விட்டால் அவன் உள்;ர் வாசி போலவே தொழுவான். அந்த நேரம் சென்ற பின் குடும்பத்தாரிடம் வந்தால் பயணியின் தொழுகை போல் தொழுவான். காரணம், அவன் மீது கடமையானபடியே அதை நிறைவேற்ற வேண்டும் என்பதால் தான்”” என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இதுவே என் ஊர் அறிஞர்களும், மக்களும் கடைபிடிக்கும் சட்டமாகும் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
மஹ்ரிபு நேரத்தில் ஏற்படும் மஞ்சள் நிறம் மறைந்து விட்டால், இஷாத் தொழுகை நேரம் ஏற்பட்டு விடும். அந்த மஹ்ரிபு நேரத்திலிருந்து நீ வெளியாகி விட்டாய் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(முஅத்தா மாலிக்: 23)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّهُ كَانَ يَقُولُ
«إِنَّ الْمُصَلِّيَ لَيُصَلِّي الصَّلَاةَ وَمَا فَاتَهُ وَقْتُهَا. وَلَمَا فَاتَهُ مِنْ وَقْتِهَا أَعْظَمُ، أَوْ أَفْضَلُ مِنْ أَهْلِهِ وَمَالِهِ»
قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ: «مَنْ أَدْرَكَ الْوَقْتَ وَهُوَ فِي سَفَرٍ، فَأَخَّرَ الصَّلَاةَ سَاهِيًا أَوْ نَاسِيًا، حَتَّى قَدِمَ عَلَى أَهْلِهِ أَنَّهُ، إِنْ كَانَ قَدِمَ عَلَى أَهْلِهِ وَهُوَ فِي الْوَقْتِ، فَلْيُصَلِّ صَلَاةَ الْمُقِيمِ. وَإِنْ كَانَ قَدْ قَدِمَ وَقَدْ ذَهَبَ الْوَقْتُ، فَلْيُصَلِّ صَلَاةَ الْمُسَافِرِ. لِأَنَّهُ إِنَّمَا يَقْضِي مِثْلَ الَّذِي كَانَ عَلَيْهِ»
قَالَ مَالكٌ: «وَهَذَا الْأَمْرُ هُوَ الَّذِي أَدْرَكْتُ عَلَيْهِ النَّاسَ، وَأَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا»
وقَالَ مَالِكٌ: «الشَّفَقُ الْحُمْرَةُ الَّتِي فِي الْمَغْرِبِ. فَإِذَا ذَهَبَتِ الْحُمْرَةُ، فَقَدْ وَجَبَتْ صَلَاةُ الْعِشَاءِ، وَخَرَجْتَ مِنْ وَقْتِ الْمَغْرِبِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-23.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்