சப்தமிட்டு ஓதித் தொழுத தொழுகையை முடித்த நபி(ஸல்) அவர்கள், உங்களில் எவரேனும்சற்று முன் என்னுடன் ஓதினாரா? என்று கேட்டார்கள். ஒருவர், இறைத்தூதர் அவர்களே! ஆம்! நான் தான் என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள், நான் குர்ஆன் ஓதுவதற்கு (இது) இடையூறாக உள்ளது என நான் கூறிக் கொண்டிருக்கின்றேன். (பிறகு ஏன் ஓதுகின்றீர்கள்?) என்று கேட்டார்கள். உடனே நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு தொழுகையில் ஓதும் கிராஅத்தைக் கேட்டதும், தாங்களும் ஓதுவதை விட்டு விட்டனர் என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது அபூதாவூது, நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், முஸ்னதுஷ்ஷாபி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது).
(முஅத்தா மாலிக்: 230)وَحَدَّثَنِي يَحْيَى، عَنْ مالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ أُكَيْمَةَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنْ صَلَاةٍ جَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ، فَقَالَ: «هَلْ قَرَأَ مَعِي مِنْكُمْ أَحَدٌ آنِفًا»؟ فَقَالَ رَجُلٌ: نَعَمْ. أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ»، فَانْتَهَى النَّاسُ عَنِ الْقِرَاءَةِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا جَهَرَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْقِرَاءَةِ، حِينَ سَمِعُوا ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-230.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்