பாடம்: 52
தொழுகை இருப்பில் அமரும் முறை
தொழுகையில் பொடிக் கற்களால் நான் சுண்டிக் கொண்டிருந்தேன். இதைக் கண்ட அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவாகள் தொழுகை முடிந்ததும், என்னைத் தடுத்தார்கள். ”நபி(ஸல்) அவர்கள்; செய்தது போல் செய்”” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்தால் தனது வலது தொடை மீது தனது உள்ளங்கையை வைப்பார்கள். தன் விரல்களை வளைத்து பெரு விரலை அடுத்துள்ள விரலால் இஷாரா செய்வார்கள். தனது இடது தொடை மீது இடது உள்ளங்கையை வைப்பார்கள். இவ்வாறே அவர்கள் செய்வார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறினார்கள்.
இதை அலீ இப்னு அப்துர் ரஹ்மான் அல் மஆதி கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 235)52- بَابُ الْعَمَلِ فِي الْجُلُوسِ فِي الصَّلَاةِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مالِكٍ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ أَنَّهُ قَالَ
رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَأَنَا أَعْبَثُ بِالْحَصْبَاءِ فِي الصَّلَاةِ. فَلَمَّا انْصَرَفْتُ نَهَانِي. وَقَالَ: اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ. فَقُلْتُ: وَكَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ؟ قَالَ: كَانَ «إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ، وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا، وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى»، وَقَالَ هَكَذَا كَانَ يَفْعَلُ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-235.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்