தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-241

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“பிஸ்மில்லாஹ், அத்தஹிய்யாத்து லில்லாஹி அஸ்ஸலவாத்து லில்லாஹி, அஸ்ஸாக்கியாத்து லில்லாஹி, அஸ்ஸலாமு அலன் னபிய்யி வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் இருப்பில் தஷஹ்ஹுது கூறுவார்கள். இதை இரண்டாவது ரக்அத்தில் கூறுவார்கள். பின்பு தஷஹ்ஹுதுக்குப் பின் தனக்குத் தோன்றியதை எல்லாம் துஆச் செய்வார்கள்.

தன் தொழுகையில் கடைசியாக அமர்ந்தால் இவ்வாறே தஷஹ்ஹுதை ஓதுவார்கள் – என்றாலும் தஷஹ்ஹுதை முற்படுத்துவார்கள். பின்பு தனக்குத் தோன்றியதை துஆச் செய்வார்கள். தஷஹ்ஹுத் ஓதுவதை முடித்து, ஸலாம் கூறிட விரும்பினால், “அஸ்ஸலாமு அலன்னபிய்யி வரஹ்மதுல்லாஹி, வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதிஹிஸ் ஸாலிஹீன்” என்று கூறி விட்டு, தன் வலது புறத்தில், “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறுவார்கள். பின்பு இமாமுக்கு பதில் கூறுவார்கள். அவர்களுக்கு இடது புறத்திலுள்ள யாராவது ஒருவர் அவர்களுக்கு ஸலாம் கூறினால் அவருக்குப்பதில் கூறுவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.

(முஅத்தா மாலிக்: 241)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَتَشَهَّدُ فَيَقُولُ: ” بِسْمِ اللَّهِ، التَّحِيَّاتُ لِلَّهِ، الصَّلَوَاتُ لِلَّهِ، الزَّاكِيَاتُ لِلَّهِ، السَّلَامُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، شَهِدْتُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، شَهِدْتُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، يَقُولُ هَذَا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ. وَيَدْعُو، إِذَا قَضَى تَشَهُّدَهُ، بِمَا بَدَا لَهُ. فَإِذَا جَلَسَ فِي آخِرِ صَلَاتِهِ، تَشَهَّدَ كَذَلِكَ أَيْضًا، إِلَّا أَنَّهُ يُقَدِّمُ التَّشَهُّدَ، ثُمَّ يَدْعُو بِمَا بَدَا لَهُ. فَإِذَا قَضَى تَشَهُّدَهُ، وَأَرَادَ أَنْ يُسَلِّمَ، قَالَ: السَّلَامُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، السَّلَامُ عَلَيْكُمْ ” عَنْ يَمِينِهِ، ثُمَّ يَرُدُّ عَلَى الْإِمَامِ. فَإِنْ سَلَّمَ عَلَيْهِ أَحَدٌ عَنْ يَسَارِهِ، رَدَّ عَلَيْهِ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-241.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.