தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-247

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 55

மறந்தவராக இரண்டாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்தவர் செய்ய வேண்டியவை

நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் (தொழுகையை) முடித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? மறந்து விட்டீர்களா? என (நீண்ட கைகள் உடைய) துல்யதைன் என்ற நபித்தோழர் கேட்டார். துல்யதைன் கூறுவது உண்மையா? என்று நபி(ஸல்) அவர்ள் கேட்டதும் நபித்தோழர்கள், ‘ஆம்’ என்றனர். பின்பு நபி(ஸல்) எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்துக்களையும் தொழ வைத்தார்கள். பின்பு ஸலாம் கூறினார்கள். பின்பு தக்பீர் கூறி எப்போதும் செய்யும் ஸஜ்தா போலவோ அல்லது நீண்டதாகவோ ஸஜ்தா செய்தார்கள். பின்பு தலையை உயர்த்தி விட்டு, தக்பீர் கூறி, எப்போதும் செய்யும் ஸஜ்தா போன்றோ அல்லது அதைவிட அதிக நேரமோ ஸஜ்தா செய்தார்கள். பின்பு தலையை உயர்த்தினார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இது புகாரி, முஸ்லிமிலும் உள்ளது.

(முஅத்தா மாலிக்: 247)

55- بَابُ مَا يَفْعَلُ مَنْ سَلَّمَ مِنْ رَكْعَتَيْنِ سَاهِيًا

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ: أَقَصُرَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ»؟ فَقَالَ النَّاسُ: نَعَمْ. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-247.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.