தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-248

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அஸர் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். இரண்டாவது ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்தார்கள். துல்யதைன் என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். அப்படியொன்றும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! அப்படித்தான் நடந்தது! என்று அவர் கூறியதும் மக்களை நோக்கி துல்யதைன் கூறுவத உண்மையா? எனக் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் எனக் கூறியதும், தொழுகையின் மற்ற ரக்அத்துக்களை பூர்த்தி செய்தார்கள். பின்பு இருப்பில் இருந்தவாறே ஸலாம் கொடுத்தப் பின்பு இரண்டு ஸஜ்தா செய்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 248)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ أَبِي سُفْيَانَ مَوْلَى ابْنِ أَبِي أَحْمَدَ أَنَّهُ قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ

صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعَصْرِ، فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ. فَقَامَ ذُو الْيَدَيْنِ فَقَالَ: أَقَصُرَتِ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ»، فَقَالَ: قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ فَقَالَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ؟» فَقَالُوا: نَعَمْ. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَمَّ مَا بَقِيَ مِنَ الصَّلَاةِ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ التَّسْلِيمِ، وَهُوَ جَالِسٌ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-248.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.