தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-249

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி(ஸல்) அவர்கள் பகல் நேரத் தொழுகை ஒன்றில் லுஹரை அல்லது அஸரை இரண்டு ரக்அத்துக்கள் தொழ வைத்தார்கள். இரண்டாவது ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்தார்கள். துல்யதைன் என்பவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டதா? அல்லது மறந்தீர்களா? என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், தொழுகை குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! அது போலவே நடந்தது ன்று துல்யதைன் கூறினார். நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, துல்யதைன் உண்மை கூறுகிறாரா? என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! ஆம் என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் விடுபட்ட தொழுகையை முழுமைப்படுத்தினார்கள். பின்பு ஸலாம் கூறினார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்ததாக அபூபக்கர் இப்னு சுலைமான் இப்னு அபீ ஹஸ்மா கூறுகிறார்.

(முஅத்தா மாலிக்: 249)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ قَالَ

بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكَعَ رَكْعَتَيْنِ مِنْ إِحْدَى صَلَاتَيِ النَّهَارِ: الظُّهْرِ أَوِ الْعَصْرِ. فَسَلَّمَ مِنَ اثْنَتَيْنِ. فَقَالَ لَهُ ذُو الشِّمَالَيْنِ: أَقَصُرَتِ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قَصُرَتِ الصَّلَاةُ وَمَا نَسِيتُ»، فَقَالَ ذُو الشِّمَالَيْنِ: قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ فَقَالَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ؟» فَقَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَأَتَمَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَقِيَ مِنَ الصَّلَاةِ ثُمَّ سَلَّمَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-249.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.