தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-25

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 6

தொழாமல் தூங்குதல்

கைபர் போரில் இருந்து நபி(ஸல்) அவர்கள் திரும்பும் போது, இரவின் இறுதிப் பகுதி வந்ததும் ஓய்வு எடுத்தார்கள். ”எங்களுக்காக வேண்டி சுப்ஹுக்காக (எழுப்பிட) நீர் விழித்திடு இரு!”” என்று பிலால்(ரலி) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் தூங்கினார்கள். இறைவன் நாடிய அளவுக்கு பிலால்(ரலி) அவர்கள் பஜ்ரின் நேரத்தை எதிர்நோக்கியவர்களாக ஒட்டகத்தின் மீது காத்திருந்தார்கள். அவரை (மீறி) அவரது கண்கள் மிகைத்து விட்டன. சூரியன் ஒளி அடிக்கும் வரை நபி(ஸல்) அவர்களோ, பிலாலோ, உடனிருந்த பயணிகளில் எவருமே விழிக்கவில்லை. (சூரிய ஒளிபட்டதும்) நபி(ஸல்) அவர்கள் திடுக்குற்று, ”பிலாலே! இது என்ன?”” என்று கேட்க, ”இறைத்தூதர்(ஸல்) அவர்களே..! உங்களை பிடித்ததே (தூக்கமே) என்னையும் ஆட் கொண்டது””, என பிலால்(ரலி) கூறினார்கள்.

ஒட்டகத்தை ஓட்டுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித் தோழர்கள் தங்கள் வாகனங்களை எழுப்பி ஓட்டலானார்கள். பின்பு (வேறு ஒரு இடத்தில்) பிலால்(ரலி) அவர்களை (பாங்கு கூற) கட்டளையிட்டார்கள். தொழுகைக்கு (பிலால்(ரலி)) இகாமத் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு சுப்ஹைத் தொழ வைத்தார்கள். தொழுகை முடிந்ததும், ”ஒருவர் தொழ மறந்து விட்டால் அதை நினைவு கூர்ந்ததும் அவர் தொழட்டும்!””, காரணம், அல்லாஹ் தன் வேதத்தில், ”என்னை நினைவு கூர்வதற்காகத் தொழுவீராக! (20:14) என்று கூறுகிறான்”” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.

(ஸயீத் இப்னு முஸய்யப் நபித் தோழர் அல்ல. எனினும் நபித்தோழர் அபூஹுரைரா(ரலி) அறிவித்து இது முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீயிலும் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 25)

6- النَّوْمُ عَنِ الصَّلاَةِ.

حَدَّثَنِي يَحْيَى، عَنِ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَفَلَ مِنْ خَيْبَرَ، أَسْرَى، حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ عَرَّسَ وَقَالَ لِبِلَالٍ: «اكْلَأْ لَنَا الصُّبْحَ»، وَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ، وَكَلَأَ بِلَالٌ مَا قُدِّرَ لَهُ، ثُمَّ اسْتَنَدَ إِلَى رَاحِلَتِهِ، وَهُوَ مُقَابِلُ الْفَجْرِ، فَغَلَبَتْهُ عَيْنَاهُ، فَلَمْ يَسْتَيْقِظْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا بِلَالٌ، وَلَا أَحَدٌ مِنَ الرَّكْبِ، حَتَّى ضَرَبَتْهُمُ الشَّمْسُ. فَفَزِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بِلَالٌ: يَا رَسُولَ اللَّهِ أَخَذَ بِنَفْسِي الَّذِي أَخَذَ بِنَفْسِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَادُوا،». فَبَعَثُوا رَوَاحِلَهُمْ وَاقْتَادُوا شَيْئًا، ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا فَأَقَامَ الصَّلَاةَ، فَصَلَّى بِهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ، ثُمَّ قَالَ حِينَ قَضَى الصَّلَاةَ: ” مَنْ نَسِيَ الصَّلَاةَ فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ {أَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي} [طه: 14]


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-25.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: முஸ்லிம்-1211 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.