தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-252

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 56

தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால், தொழுபவர் அதனை முழுமைப்படுத்துதல்

உங்களில் ஒருவருக்கு தொழுகையில் தான் தொழுதது மூன்றா? நான்கா? என அவரால் அறியாத அளவுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர் மற்றொரு ரக்அத் தொழட்டும்! பின்பு ஸலாம் கொடுக்கு முன் உட்கார்ந்த நிலையில் இரண்டு சஜ்தா செய்யட்டும். அவர் தொழுதது ஐந்தாவது ரக்அதாக இருந்தால் அவர் செய்த இரண்டு ஸஜ்தாக்களும் (ஐந்தாவது ரக்அத்தும் சேர்ந்து) இரண்டு ரக்அத்தாக ஆகி விடும். அது நான்காவதாக இருந்தால் அந்த இரண்டு ஸஜ்தாக்களும் ஷைத்தானுக்கு மூக்குடைப்பாக அமையும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அதாஉ இப்னு யஸார் கூறுகிறார்கள்.

(இது அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிப்பதாக முஸ்லிம், அஹ்மதில் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 252)

56- بَابُ إِتْمَامِ الْمُصَلِّي مَا ذَكَرَ إِذَا شَكَّ فِي صَلَاتِهِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى أَثَلَاثًا أَمْ أَرْبَعًا؟ فَلْيُصَلِّي رَكْعَةً. وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ، قَبْلَ التَّسْلِيمِ. فَإِنْ كَانَتِ الرَّكْعَةُ الَّتِي صَلَّى خَامِسَةً، شَفَعَهَا بِهَاتَيْنِ السَّجْدَتَيْنِ، وَإِنْ كَانَتْ رَابِعَةً فَالسَّجْدَتَانِ تَرْغِيمٌ لِلشَّيْطَانِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-252.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.