தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-261

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூதல்ஹா அன்சாரி(ரலி) அவர்கள், தன் தோட்டத்தில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது துப்ஷீ என்ற பறவை பறந்து வந்தது. அதை இவர் உற்று நோக்கினார். அது வட்டமிட்டு பறந்து, தன் கூண்டில் அடைந்தது. அது அவரைக் கவர்ந்தது. சிறிது நேரம் அதையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு மீண்டும் தொழுகையில் கவனம் செலுத்தினார். தான் எத்தனை தொழுதோம் என்பது அவருக்கு நினைவில்லை. இந்த சொத்து எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதே என்று கூறிக் கொண்டார். உடனே அவர், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தன் தோட்டத்தில் தனக்கு ஏற்பட்ட குழப்பம் பற்றிக் கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! இந்த தோட்டம் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்கிறேன். நீங்கள் விரும்பியபடி இதே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதை அப்துல்லா இப்னு அபூபக்கர் கூறுகின்றார்.

(முஅத்தா மாலிக்: 261)

وَحَدَّثَنِي مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ

أَنَّ أَبَا طَلْحَةَ الْأَنْصَارِيَّ كَانَ يُصَلِّي فِي حَائِطِهِ فَطَارَ دُبْسِيٌّ، فَطَفِقَ يَتَرَدَّدُ، يَلْتَمِسُ مَخْرَجًا. فَأَعْجَبَهُ ذَلِكَ. فَجَعَلَ يُتْبِعُهُ بَصَرَهُ سَاعَةً. ثُمَّ رَجَعَ إِلَى صَلَاتِهِ، فَإِذَا هُوَ لَا يَدْرِي كَمْ صَلَّى؟ فَقَالَ: لَقَدْ أَصَابَتْنِي فِي مَالِي هَذَا فِتْنَةٌ، فَجَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ لَهُ الَّذِي أَصَابَهُ فِي حَائِطِهِ مِنَ الْفِتْنَةِ وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هُوَ صَدَقَةٌ للَّهِ فَضَعْهُ حَيْثُ شِئْتَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-261.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.