அன்சாரி நபித்தோழர் ஒருவர் மதீனாவின் ஒரு ஓடை அருகே உள்ள “குஃப்” என்ற தன் தோட்டத்தில் தொழுது கொண்டிருந்தார். அது போரித்தம்பழமும், மற்ற கனிகளும் விளையும் காலம் அது. கனிகள் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதை அவர் பார்த்தார். அந்த கனிகளைப் பார்த்து, அவாரின் கவனத்தை ஈர்த்தது. பின்பு மீண்டும் தன் தொழுகையில் கவனம் செலுத்தினார். தான் எத்தனை தொழுதோம் என்பதை மறந்து விட்டார். “என் சொத்து காரணமாக எனக்கு இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டது” என்று கூறிக் கொண்டார். அன்றை நாளில் கலீபாவாக இருந்த உதுமான் பின் அஃப்பான்(ரலி) அவர்களிடம் வந்தார். இது பற்றி அவர்களிடம் கூறினார். இந்த தோட்டம் தர்மப் பொருளாகும். நல்வழியில் அதை நீங்கள் (செலவுக்கு) வையுங்கள் என்று கூறினார். உடனே உதுமான்(ரலி) அவர்கள் அதை 50 ஆயிரம் தினாருக்கு விற்றார்கள். அந்த சொத்துக்கு “ஐம்பது” என்று பெயர் வந்தது. இதை அப்துல்லா இப்னு அபுபக்கர் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 262)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ
أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ كَانَ يُصَلِّي فِي حَائِطٍ لَهُ بِالْقُفِّ – وَادٍ مِنْ أَوْدِيَةِ الْمَدِينَةِ – فِي زَمَانِ الثَّمَرِ، وَالنَّخْلُ قَدْ ذُلِّلَتْ، فَهِيَ مُطَوَّقَةٌ بِثَمَرِهَا فَنَظَرَ إِلَيْهَا، فَأَعْجَبَهُ مَا رَأَى مِنْ ثَمَرِهَا. ثُمَّ رَجَعَ إِلَى صَلَاتِهِ فَإِذَا هُوَ لَا يَدْرِي كَمْ صَلَّى؟ فَقَالَ: لَقَدْ أَصَابَتْنِي فِي مَالِي هَذَا فِتْنَةٌ، فَجَاءَ عُثْمَانَ بْنَ عَفَّانَ – وَهُوَ يَوْمَئِذٍ خَلِيفَةٌ – فَذَكَرَ لَهُ ذَلِكَ. وَقَالَ: هُوَ صَدَقَةٌ فَاجْعَلْهُ فِي سُبُلِ الْخَيْرِ. «فَبَاعَهُ عُثْمَانُ بْنُ عَفَّانَ بِخَمْسِينَ أَلْفًا» فَسُمِّيَ ذَلِكَ الْمَالُ الْخَمْسِينَ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-262.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்