பாடம் 60
வெள்ளிக் கிழமை குளித்தல்
ஒருவர் ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பு போல் குளித்து விட்டு முதல் நேரத்திலேயே வந்தால் அவர் ஒட்டகத்தை அறுத்(துத் தர்மம் செய்)தவர் போலாவார். இரண்டாவதாக வருபவர் மாட்டை அறுத்தவர் போலாவார். மூன்றாவதாக வருபவர் கொம்புள்ள ஆட்டை அறுத்தவர் போலாவார். நான்காவதாக வருபவர் கோழியை அறுத்தவர் போலாவார். ஐந்தாவதாக வருபவர் முட்டையை தர்மம் செய்தவர் போலாவார். இமாம் அவர்கள் (பிரசங்கம் செய்ய) வந்து விட்டால் (கணக்கு எடுத்த) வானவர்கள் பயானை (உரையை) கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 266)5 – كِتَابُ الْجُمُعَةِ
60- بَابُ الْعَمَلِ فِي غُسْلِ يَوْمِ الْجُمُعَةِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ، ثُمَّ رَاحَ فِي السَّاعَةِ الْأُولَى، فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتِ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-266.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்