தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-275

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஜும்ஆ நாளன்று இமாம் பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விட்டால் அமைதியாக இருந்து, அதைக் கேளுங்கள். உரையைக் கேட்பதற்காகவே அமைதியாக இருப்பவனுக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே உரையைக் கேட்காமல் (அது சமயம்) அமைதியாக இருப்பவனுக்கும் உண்டு. தொழுகைக்கு நின்றால், வரிசைகளை சரி செய்து கொள்வது, தொழுகையைப் பூர்த்தி செய்வதில் உள்ளதாகும் என்று உஸ்மான்(ரலி) அவர்கள் தன் உரையில் கூறுவார்கள். பிரசங்கம் செய்யும் போது இப்படி அவர்கள் கூறாமல் இருப்பது மிகக் குறைவாகவே இருந்தது. பின்பு வரிசைகளை சரி செய்ய அவர்கள் நியமித்திருந்தவர்கள் வந்து கூறும் வரை தக்பீர் கூற மாட்டார்கள். வரிசைகள் சரியாக உள்ளன என அவர்களிடம் அவர்கள் கூறிய பின்பே தக்பீர் கூறுவார்கள்.

(முஅத்தா மாலிக்: 275)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ

أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَ يَقُولُ فِي خُطْبَتِهِ، قَلَّ مَا يَدَعُ ذَلِكَ إِذَا خَطَبَ: «إِذَا قَامَ الْإِمَامُ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَاسْتَمِعُوا وَأَنْصِتُوا. فَإِنَّ لِلْمُنْصِتِ، الَّذِي لَا يَسْمَعُ، مِنَ الْحَظِّ، مِثْلَ مَا لِلْمُنْصِتِ السَّامِعِ. فَإِذَا قَامَتِ الصَّلَاةُ فَاعْدِلُوا الصُّفُوفَ، وَحَاذُوا بِالْمَنَاكِبِ، فَإِنَّ اعْتِدَالَ الصُّفُوفِ مِنْ تَمَامِ الصَّلَاةِ». ثُمَّ لَا يُكَبِّرُ، حَتَّى يَأْتِيَهُ رِجَالٌ قَدْ وَكَّلَهُمْ بِتَسْوِيَةِ الصُّفُوفِ، فَيُخْبِرُونَهُ أَنْ قَدِ اسْتَوَتْ، فَيُكَبِّرُ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-275.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.