தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-299

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 69

ரமளானில் தொழுவது பற்றி ஆர்வமூட்டல்

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவு பள்ளியில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சில மக்களும் தொழுதார்கள். மறுநாளும் தொழுதார்கள். அப்போது மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது. மூன்றாம் இரவோ, நான்காவது இரவிலோ மக்கள் (தொழ) ஒன்று கூடிய போது, நபி(ஸல்) அவர்கள் (அவர்களுக்குத் தொழ வைக்க) அவர்களிடம் வரவில்லை. (மறுநாள்) காலையில், ‘நீங்கள் (ஒன்று கூடி) இருந்ததைப் பார்த்தேன். எங்கே இந்த (இரவுத்) தொழுகை உங்கள் மீது கடமையாகி விடுமோ என்று அஞ்சியே நான் உங்களுக்குத் தொழ வைக்க வரவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இது ரமளானில் நடந்தது என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 299)

6 – كِتَابُ الصَّلَاةِ فِي رَمَضَانَ
69- بَابُ التَّرْغِيبِ فِي الصَّلَاةِ فِي رَمَضَانَ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْمَسْجِدِ ذَاتَ لَيْلَةٍ، فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ. ثُمَّ صَلَّى اللَّيْلَةَ الْقَابِلَةَ، فَكَثُرَ النَّاسُ. ثُمَّ اجْتَمَعُوا مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ، فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَلَمَّا أَصْبَحَ، قَالَ: «قَدْ رَأَيْتُ الَّذِي صَنَعْتُمْ، وَلَمْ يَمْنَعْنِي مِنَ الْخُرُوجِ إِلَيْكُمْ، إِلَّا أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ» وَذَلِكَ فِي رَمَضَانَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-299.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.