நபி(ஸல்) அவர்கள் ரமளானின் இரவு வணக்கத்திற்கு ஆர்வமூட்டினார்கள். ஆனால் அவர்கள் வலியுறுத்தி கட்டளையிடவில்லை. ஒருவர் மன உறுதியுடனும், நன்மையை நாடியும் ரமளானின் இரவில் வணங்கினால், அவரது முன் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இஷ்டப்பட்டவர்கள் தொழலாம் என்ற) இந்த அடிப்படையில் தான் சட்டம் இருந்த நிலையிலேயே நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூபக்கர்(ரலி) ஆட்சியிலும் இப்படியே இருந்தது. உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் இவ்வாறே இருந்தது என இப்னு ஷிஹாப் அவர்கள் கூறுகிறார்கள்.
(முஅத்தா மாலிக்: 300)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يُرَغِّبُ فِي قِيَامِ رَمَضَانَ، مِنْ غَيْرِ أَنْ يَأْمُرَ بِعَزِيمَةٍ، فَيَقُولُ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
قَالَ ابْنُ شِهَابٍ: فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالْأَمْرُ عَلَى ذَلِكَ ثُمَّ كَانَ الْأَمْرُ، عَلَى ذَلِكَ فِي خِلَافَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلَافَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-300.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்