ரமளான் மாதத்தில் உமர்(ரலி) அவர்களுடன் ஒரு பள்ளிக்குச் சென்றேன். ஒருவன் தனித்துத் தொழுதார். மற்றொருவர் (தனித்துத்) தொழுத தொழுகையை ஒரு கூட்டம் (பின்பற்றியவராக) தொழுதது. இவ்வாறு மக்கள் பலவாறாக இருந்தனர். ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர்களனைவரையும் ஒரு இமாமின் கீழ் ஒன்று சேர்த்தால் மிக சிறப்பாக அமையும் எனக் கருதுகிறேன் என்று கூறிய உமர்(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) என்ற நபித்தோழாரின் தலைமையில் மக்களை ஒன்று சேர்த்(து தொழச் செய்)தார்கள்.
பின்பு ஒருநாள் இரவு அவர்களுடன் நான் வந்த போது மக்கள் ஒரு இமாமைப் பின்பற்றி தொழுது கொண்டிருந்தனர். மக்கள் இரவின் ஆரம்ப நேரத்திலேயே தொழ ஆரம்பித்து விட்டார்கள். இந்த புதிய ஏற்பாடு நல்லதாகி விட்டது. இப்போது தொழுவது சிறந்ததாகும் என உமர்(ரலி) கூறியதாக அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் காரி கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 301)70- بَابُ مَا جَاءَ فِي قِيَامِ رَمَضَانَ
حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، أَنَّهُ قَالَ
خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ، فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ. يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ، وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ. فَقَالَ عُمَرُ: وَاللَّهِ إِنِّي لَأَرَانِي «لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ»، فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ، فَقَالَ عُمَرُ «نِعْمَتِ الْبِدْعَةُ هَذِهِ»، «وَالَّتِي تَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنِ الَّتِي تَقُومُونَ» يَعْنِي آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-301.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்