இரவில் தொழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை சுட்டிக் காட்டி, இப்பெண் யார்? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். இப்பெண் துவைத் அவர்களின் மகள் ஹவ்லா ஆகும். இவர் இரவில் தூங்குவதே இல்லை. (தொழுது கொண்டே இருப்பார்) என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது.
(இதைக் கேட்ட) அவர்களின் முகத்தில் வெறுப்பின் அடையாளத்தை நான் பார்க்கும் அளவிற்கு அவர்கள் வெறுப்படைந்தார்கள். பின்பு, ‘நிச்சயமாக நீங்கள் சடையும் அளவுக்கு (நற்செயல் செய்யுங்கள் என்று கூறி) சடைவு அடையச் செய்யவில்லை. உங்களால் இயன்ற அளவுக்கு வணக்கத்தைச் செய்யுங்கள் என்று கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக இஸ்மாயீல் இப்னு ஹகீம் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 310)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي حَكِيمٍ، أَنَّهُ بَلَغَهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعَ امْرَأَةً مِنَ اللَّيْلِ تُصَلِّي، فَقَالَ: «مَنْ هَذِهِ؟» فَقِيلَ لَهُ: هَذِهِ الْحَوْلَاءُ بِنْتُ تُوَيْتٍ لَا تَنَامُ اللَّيْلَ، فَكَرِهَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى عُرِفَتِ الْكَرَاهِيَةُ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا، اكْلَفُوا مِنَ الْعَمَلِ مَا لَكُمْ بِهِ طَاقَةٌ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-310.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்