ரமளானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எப்படி இருந்தது? என்று நான் கேட்டேன். ரமளானிலும், மற்ற நாட்களிலும் நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்தை விட அதிகப்படுத்தியதில்லை. (முதலில்) நான்கு ரக்அத் தொழுவார்கள். அவைகளின் நீளம் அதன் அழகு எப்படி இருந்தது என்று நீ கேட்க வேண்டாம். (அந்த அளவுக்கு அழகாகவும் நீளமானதாகவும் இருந்தது). பின்பு நான்கு ரக்அத் தொழுவார்கள். அதன் நீளமும், அழகும் (எப்படி இருந்தது பற்றி நீ கேட்கவே வேண்டாம். பின்பு மூன்று ரக்அத் தொழுவார்கள். (எட்டு ரக்அத்க்களுக்கும், மூன்று ரக்அத்துக்களுக்குமிடையே தூங்கி விட்டு, ஒளுச் செய்யாமல் வித்ருத் தொழுத நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களே! வித்ருக்கு முன் தூங்கினீர்களே!’ என்று கேட்டேன். ‘ஆயிஷா! என் கண்கள் தூங்கின. என் இதயம் தூங்கவில்லை’ என்று பதில் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். இதை அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 315)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ
أَنَّهُ سَأَلَ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ؟ فَقَالَتْ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزِيدُ فِي رَمَضَانَ، وَلَا فِي غَيْرِهِ، عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً. يُصَلِّي أَرْبَعًا، فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا، فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلَاثًا. فَقَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ؟ فَقَالَ: «يَا عَائِشَةُ إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ وَلَا يَنَامُ قَلْبِي»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-315.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்