நபி(ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா(ரலி) அவர்களது இல்லத்தில் ஒரு இரவு தங்கியிருந்தேன். அப்போது நான் தலையணையின் குறுக்கு வாட்டில் படுத்திருந்தேன். நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அதன் நீள வாட்டில் படுத்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிநேரம் முடிந்தோ, அல்லது அதற்கும் சற்று நேரம் முன்போ, பின்போ, தூக்கத்தில் இருந்து விழித்து அமர்ந்தார்கள். தன் கையால் தன் முகத்தைத் தடவினார்கள். பின்பு குர்ஆனின் 3 வது அத்தியாயமான ஆல இம்ரான் சூராவின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். தண்ணீர்ப் பாத்திரம் பக்கம் போய் நின்று அமைதியாக ஒளுச் செய்தார்கள். பின்பு தொழுகைக்குத் தயாரானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போல் செய்து விட்டுப் போய் அவர்களின் அருகில் (இடப்புறம்) நின்றேன். நபி(ஸல்) அவர்கள் என் தலையில் தனது வலது கையை வைத்து, என் வலது காதைப் பிடித்துத் திருகி (வலது புறத்தில் நிறுத்தி)னார்கள். நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத், பின்பு இரண்டு, பின்பு இரண்டு, பின்பு இரண்டு, பின்புஇரண்டு, பின்பு இரண்டு (ஆக 12) ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு (சிறிது நேரம்) படுத்திருந்தார்கள். பின்பு வித்ருத் தொழுதார்கள். பாங்கு கூறுபவர் வந்ததும், சிறிய அளவில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்பு (வீட்டை விட்டு) வெளியேறி (பள்ளிக்குச்) சென்று சுபுஹ் தொழ வைத்தார்கள் என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 317)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ
أَنَّهُ بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِيَ خَالَتُهُ، قَالَ: فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ، فِي طُولِهَا. فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ، أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ «قَرَأَ الْعَشْرَ الْآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ». ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقٍ فَتَوَضَّأَ مِنْهُ، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي. قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ. ثُمَّ رَكْعَتَيْنِ. ثُمَّ رَكْعَتَيْنِ. ثُمَّ رَكْعَتَيْنِ. ثُمَّ رَكْعَتَيْنِ. ثُمَّ رَكْعَتَيْنِ. ثُمَّ أَوْتَرَ ثُمَّ اضْطَجَعَ، حَتَّى أَتَاهُ الْمُؤَذِّنُ. فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-317.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்